Home
Mobile

ரூ.11,999-விலையில் 50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வரும் மார்ச் 12-ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ரியல்மி சி35 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி35 ஸ்மார்ட்போனை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி35 மாடலை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் கருப்பு, பச்சை நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.

ரியல்மி சி35 ஸ்மார்ட்போன்

ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,408 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 ரியல்மி சி35 ஸ்மார்ட்போனில் மிகவும்

இந்த புதிய ரியல்மி சி35 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் Unisoc T616 சிப்செட் வசதி உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ரியல்மி சி35ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி சி35 ஸ்மார்ட்போனின் பின்புறம்

புதிய ரியல்மி சி35 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம்மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும்

ரியல்மி சி35 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி35 ஸ்மார்ட்போ

இந்த ரியல்மி சி35 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு கைரேகை
சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்குஅதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத்

4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme C35 With Triple Rear Cameras Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X