Home
Mobile

பிப்ரவரி 10: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ரியல்மி சி35.!

ரியல்மி நிறுவனம் ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் மாடலை வரும் பிப்ரவரி 10-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ரியல்மி சி35 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி சி35 ஸ்மார்ட்போன்

ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். பின்பு720 x 1560 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ரியல்மி சி35 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச்

இந்த ரியல்மி சி35 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு
18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி சி35 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேம

ரியல்மி சி35 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

 ஸ்மார்ட்போனில் UNISOC T616 சிப்செட்

ரியல்மி சி35 ஸ்மார்ட்போனில் UNISOC T616 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. கண்டிப்பாக இந்த சிப்செட் பயன்படுத்துவதற்குமிக அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல் வெளிவரும்.

ரியல்மி சி35 ஸ்மார்ட்போனில்

ரியல்மி சி35 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்து ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0,

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு
ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி சி35 ஸ்மார்ட்போன்

ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு,நீலம் போன்ற நிறங்களில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாகஇந்த ஸ்மார்ட்போன் இந்தியசந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Realme C35 with 50 Mega Pixel Camera Launching in India on February 10: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X