Home
Mobile

நாளை அறிமுகமாகும் ரியல்மி சி35 ஸ்மார்ட்போன்.! என்னென்ன அம்சங்கள்?

ரியல்மி நிறுவனம் நாளை (பிப்ரவரி 10) புதிய ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள், தரமான சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. மேலும் இப்போது ரியல்மி சி35 ஸ்மார்ட்போனின் சில புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

ரியல்மி சி35

நாளை அறிமுகமாகும் ரியல்மி சி35 ஸ்மார்ட்போன்.! என்னென்ன அம்சங்கள்?

மேலும் இப்போது இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்ங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். பின்பு720 x 1560 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அதேபோல் இந்த ரியல்மி சி35 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நாளை அறிமுகமாகும் ரியல்மி சி35 ஸ்மார்ட்போன்.! என்னென்ன அம்சங்கள்?

ரியல்மி சி35 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

புதிய ரியல்மி சி35 ஸ்மார்ட்போனில் UNISOC T616 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. கண்டிப்பாக இந்த சிப்செட்
பயன்படுத்துவதற்குமிக அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல் வெளிவரும். குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி35 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்து ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

நாளை அறிமுகமாகும் ரியல்மி சி35 ஸ்மார்ட்போன்.! என்னென்ன அம்சங்கள்?

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் மாடல்குறிப்பாக இந்த ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த சாதனம் கருப்பு, நீலம்போன்ற நிறங்களில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் இந்நிறுவனம் ரியல்மி 9ஐஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது.

ரியல்மி 9ஐ

நாளை அறிமுகமாகும் ரியல்மி சி35 ஸ்மார்ட்போன்.! என்னென்ன அம்சங்கள்?

அதன்படி ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி
டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.பின்பு 2,400x1,080பிக்சல் தீர்மானம், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ்,240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் சிறந்த பாதுகாப்புவசதியுடன் வெளிவந்துள்ளது.

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுஇந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6ஜி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா+ 2எம்பி மோனோக்ரோம் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நாளை அறிமுகமாகும் ரியல்மி சி35 ஸ்மார்ட்போன்.! என்னென்ன அம்சங்கள்?

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்,33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Realme C35 with 5,000mAh Battery Launching in India on February 10: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X