Home
Mobile

மிகவும் குறைவான விலையில் அறிமுகமாகும் Realme C33: பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க..!

ரியல்மி கடந்த சில வாரங்களில் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக விவோ, மோட்டோ, சாம்சங் நிறுவனங்களுக்குப் போட்டியாக பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது ரியல்மி நிறுவனம்.

 ரியல்மி சி33

ரியல்மி சி33

இந்நிலையில் ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி சி33 (Realme C33) எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த மாதம் இறுதிக்குள் ரியல்மி சி33 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நீங்கள் எதிர்பார்த்த நிறங்கள்

நீங்கள் எதிர்பார்த்த நிறங்கள்

இப்போது இணையத்தில் கசிந்த ரியல்மி சி33 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். ரியல்மி சி33 (Realme C33) ஸ்மார்ட்போன்ஆனது சாண்டி கோல்ட், அக்வா ப்ளூ மற்றும் நைட் சீ போன்ற நிறங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்தஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

எல்சிடி டிஸ்பிளே வசதி

எல்சிடி டிஸ்பிளே வசதி

ரியல்மி சி33 ஸமார்ட்போன் 6.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா எப்படி?

கேமரா எப்படி?

புதிய ரியல்மி சி33 ஸமார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக 13எம்பி பிரைமரி கேமரா
ஆதரவு உள்ளதால் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றம் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

விரைவில் அறிமுகமாகும் ரியல்மி சி33 ஸமார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி/128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி33 ஸமார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் ரியல்மி சி33 ஸமார்ட்போன் மாடல். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். குறிப்பாக கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி33 ஸமார்ட்போன்.

என்ன பிராசஸர்?

என்ன பிராசஸர்?

புதிய ரியல்மி சி33 ஸமார்ட்போனில் Unisoc பிராசஸர் வசதி உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதி இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறைந்த விலை

குறைந்த விலை

ரியல்மி சி33 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறைந்த விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடும் பயனர்கள் இந்த மாதம் இறுதிவரை காத்திருக்கவும்.

அதேபோல வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி இந்நிறுவனம் ரியல்மி 9ஐ 5ஜி (Realme 9i 5G) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரியல்மி 9ஐ 5ஜி

ரியல்மி 9ஐ 5ஜி

ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 810 5ஜி சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய போனில் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போனில் 50எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

விரைவில் அறிமுகமாகும் ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 6ஜிபி ரேம், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Realme C33 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X