யோசிக்காம இன்றே Realme C33 போனை வாங்கினால் விலை 8,999 மட்டுமே: என்ன செய்யணும் தெரியுமா?

|

குறைந்த விலையில் ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பிளான் செய்து வருகிறீர்களா? ஆனால், எந்த ஸ்மார்ட்போன் மாடல் பெஸ்ட்டானது என்று செலக்ட் செய்வதில் குழப்பமா? கவலைய விடுங்க, கண்ணை மூடிக்கிட்டு யோசிக்காம இன்றே வாங்க கூடிய ஒரு பெஸ்டான லேட்டஸ்ட் Realme C33 ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று முதல் துவங்குகிறது.

மலிவு விலையில் இப்படி அட்டகாசமான அம்சங்களா?

மலிவு விலையில் இப்படி அட்டகாசமான அம்சங்களா?

Realme C33 இன்று இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. Realme நிறுவனத்தின் இந்த புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போனில் UniSoC T612 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாக காரணமாக இருப்பது, இதன் மலிவு விலை என்று ஒரு பக்கம் நாம் கூறினாலும், இப்படி ஒரு மலிவு விலையில் இது அட்டகாசமான அம்சங்களுடன் வருகிறது.

இப்படி ஒரு கம்மி விலை போனில் 50MP கேமராவா?

இப்படி ஒரு கம்மி விலை போனில் 50MP கேமராவா?

இது ஒரு பெரிய டிஸ்ப்ளே பேனலை கொண்டுள்ளது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 5000mAh பேட்டரி யூனிட்டை பேக் செய்துள்ளது. Realme C33 இன் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 50MP கேமராவை கொண்டுள்ளது. இதில் 10W சார்ஜிங் மற்றும் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்றவை உள்ளது. இந்தியாவில் Realme C33 போனின் விலை, அறிமுக சலுகை, சிறப்பம்சம் போன்ற அம்சங்களை பார்க்கலாம்.

உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!

Realme C33 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை

Realme C33 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை

இந்தியாவில் புதிய Realme C33 ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலில் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை வெறும் ரூ. 8999 ஆக இருக்கிறது. இதன் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 9999 ஆக இருக்கிறது. Realme C33 இன்று மதியம் 12:00 மணி முதல் Flipkart மற்றும் Realme Store வழியாக பிரத்தியேகமாக கிடைக்கும். அறிமுகச் சலுகையாக, HDFC டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும்.

Realme C33 போனின் சிறப்பம்சம்

Realme C33 போனின் சிறப்பம்சம்

Realme C33 ஸ்மார்ட்போன் 6.52' இன்ச் கொண்ட HD+ LCD டிஸ்பிளே பேனலை கொண்டுள்ளது. இது 60Hz மற்றும் 120Hz டச் சாம்ப்ளிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது வாட்டர் டிராப் நாட்ச் உடன் வருகிறது. இது ஆக்டா-கோர் UniSoC T612 சிப்செட் உடன் Mali G57 GPU ஐ கொண்டுள்ளது. இது 4ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 64ஜிபி UFS2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Realme UI S எடிஷனை ஆதரிக்கிறது.

உங்க அமெரிக்க நண்பரிடம் கூறி கம்மி விலையில் iPhone 14 வாங்க வேண்டாம்.! ஏன் தெரியுமா?உங்க அமெரிக்க நண்பரிடம் கூறி கம்மி விலையில் iPhone 14 வாங்க வேண்டாம்.! ஏன் தெரியுமா?

தரமான கேமரா.. பெரிய சைஸ் பேட்டரி

தரமான கேமரா.. பெரிய சைஸ் பேட்டரி

Realme C33 டூயல் ரியர் கேமரா அமைப்பை வழங்குகிறது. இது 50MP பிரைமரி ஷூட்டர் உடன் AI சென்சாரை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இது 5MP ஷூட்டரைக் கொண்டுள்ளது. இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது மைக்ரோ USB சார்ஜிங் போர்ட்டில் 10W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. புதிய Realme C33 அக்வா ப்ளூ, சாண்டி கோல்ட் மற்றும் நைட் சீ வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு இன்று முதல் கிடைக்கிறது.

தாராளமாக யோசிக்காமல் உடனே வாங்கலாமா?

தாராளமாக யோசிக்காமல் உடனே வாங்கலாமா?

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிமுக சலுகையில் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்கினால், உங்களுக்கு இது ஒரு சிறந்த டீல் ஆக அமையும். அதேபோல், நீங்கள் HDFC வங்கியின் வாடிக்கையாளர் என்றால், உங்களுக்கு கிடைக்கும் ரூ.1,000 தள்ளுபடியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ரூ.7,999 என்ற விலையில் வாங்கிவிட முடியும். இப்படியான சிறந்த அம்சங்களுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போனை நீங்கள் தாராளமாக யோசிக்காமல் உடனே வாங்கலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Realme C33 Budget Price Smartphone 2022 Sale Starts Today 12 Noon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X