Home
Mobile

Realme C33 போன் வெளியானதும் உடனே வாங்கிடணும்.! யோசிக்கவே கூடாது: அப்படியென்ன அம்சங்கள்?

ரூ.10,000 விலை வரம்பிற்குள் பெஸ்டான சிறப்பம்சங்களுடன், டீசெண்டான லுக்கில் ஒரு தரமான ஸ்மார்ட்போன் மாடலை வாங்கலாமா? வேண்டாமா? என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்போ, இன்னும் 3 நாள் மட்டும் வெயிட் பண்ணுங்க. Realme நிறுவனம் இந்தியாவில் ஒரு சூப்பரான மலிவு விலை ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய போகிறது. இது உங்களுடைய அணைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் என்பதில் சந்தேகமே இல்லை.

Realme C33 என்ற ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்?

Realme C33 என்ற ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்?

Realme நிறுவனம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி, இந்தியாவில் ஒரு அறிமுக நிகழ்வை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளது. இந்த அறிமுக நிகழ்வின் போது, ரியல்மி நிறுவனம் புதிய Realme Buds Air 3S TWS வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம், Realme Watch 3 Pro என்ற ஸ்மார்ட் வாட்ச் சாதனம் மற்றும் புதிய Realme C33 என்ற ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் இந்த நிகழ்வு நீண்ட காலமாக ரியல்மி ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மலிவு விலை ஸ்மார்ட்போனா இந்த புதிய Realme C33?

மலிவு விலை ஸ்மார்ட்போனா இந்த புதிய Realme C33?

மலிவு விலை ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியச் சந்தையில் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, நிறுவனம் இந்த புதிய Realme C33 ஸ்மார்ட்போன் மாடலை செப்டம்பர் 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. Realme C33 பட்ஜெட்டை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போனாக வெளிவரும் என்பதனால், இதற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போனின் அறிமுகத்திற்கு முன்னதாக, இது பற்றிய பல முக்கியமான விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அடுத்த வாரம் யோசிக்காம வாங்கிடணும்

அடுத்த வாரம் யோசிக்காம வாங்கிடணும்

குறிப்பாக இந்த புதிய Realme C33 சாதனம் செப்டம்பர் 6ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அடுத்த வாரம் முதல் Flipkart வழியாக இந்தியாவில் வாங்குவதற்குக் கிடைக்கும் என்ற தகவலும் இப்போது வெளியாகியுள்ளது. சரி, மலிவு விலையில் எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் நாம் எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம். முதலில் இந்த பட்ஜெட் செக்மென்ட் Realme C33 போனில் தரமான டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளதா என்ற விபரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

Realme C33 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Realme C33 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Realme C33 ஸ்மார்ட்போன் 6.6' இன்ச் அளவு கொண்ட 1080 x 2408 பிக்சல் உடைய IPS LCD டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 60Hz ஆதரவை ஆதரிக்கும். Realme C33 சாதனம் 50MP பிரைமரி கேமரா உடன் கூடிய டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 2MP டெப்த் அல்லது மேக்ரோ ஷூட்டர் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பிரிவில் அதிக பிக்சல் செயல்திறன் கொண்ட சாதனமாக இது இருக்கும் என்று Realme கூறுகிறது.

Realme C33 என்ன வேரியண்ட் மாடலில் வாங்க கிடைக்கும்?

Realme C33 என்ன வேரியண்ட் மாடலில் வாங்க கிடைக்கும்?

Realme C33 இன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இதன் டிசைன் இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போனின் வடிவமைப்பு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme 9i 5G மூலம் ஈர்க்கப்பட்டது போல் தெரிகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் டிவைஸ் 3ஜிபி ரேம் கொண்ட அடிப்படை வேரியண்ட்டாகவும், இரண்டு 4ஜிபி ரேம் வேரியண்ட் மாடலாகவும் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி C33 சாதனம் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

புதிய ரியல்மி C33 விலை என்ன?

புதிய ரியல்மி C33 விலை என்ன?

இந்த புதிய ரியல்மி C33 சாதனம் ப்ளூ, கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை பற்றி பார்க்கையில், இந்த Realme C33 சாதனம் 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ், 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலாக அறிமுகம் செய்யப்படும். இந்த ரியல்மி C33 போனின் அடிப்படை வேரியண்ட் மாடல் இந்தியாவில் ரூ.9,500 முதல் ரூ.10,500 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme C33 Budget Centric Smartphone Listed on Flipkart Ahead of India Launch on September 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X