வேற லெவல்., ரூ.8,999-க்கு டிரிபிள் ரியர் கேமரா, 45 நாள் பேட்டரி ஆயுள் உடன் ரியல்மி சி31- இந்தியாவில் அறிமுகம்!
டிரிபிள் ரியர் கேமராக்கள், 5000 எ்ஏஎச் பேட்டரி உடன் கூடிய ரியல்மி சி31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது ரூ.8,999 என்ற விலைமுதல் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

டிரிபிள் ரியர் கேமராக்கள்
டிரிபிள் ரியர் கேமராக்கள், 5000 எ்ஏஎச் பேட்டரி உடன் கூடிய ரியல்மி சி31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது அடர் பச்சை மற்றும் வெளிர் சில்வர் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது ரூ.8,999 என்ற விலைமுதல் தொடங்கப்பட்டிருக்கிறது.

புதிய மலிவு விலை சி சீரிஸ் ஸ்மார்ட்போன்
ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது வியாழக் கிழமை அன்று இந்தியாவில் ரியல்மி நிறுவனத்தின் புதிய மலிவு விலை சி சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 13 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது யூனிசோக் டி612 சிப்செட் ஆதரவோடு இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4ஜிபி வரை ரேம் வசதியோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி ஆர் யூஐ மூலம் இயங்குகிறது. இந்த ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது கடந்த வாரம் அறிமுகமான இந்தோனேசிய எண்ணைப் போன்ற அதே விவரக்குறிப்புகளை கொண்டிருக்கிறது.

ரியல்மி சி31 இந்திய விலை மற்றும் கிடைக்கும் தன்மை
இந்தியாவில் ரியல்மி சி31 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி, 4 ஜிபி ரேம் மற்றும் 34 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ரியல்மி சி31 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.8,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.9,999 ஆக இருக்கிறது. ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது டார்க் க்ரீன் மற்றும் லைட் சில்வர் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அதேபோல் ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது ஏப்ரல் 6 ஆம் தேதி மதியம் 12 மணிமுதல் ரியல்மி நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர், பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் சில்லறை தளங்கள் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும் என ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது.

ரியல்மி சி31 சிறப்பம்சங்கள்
ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது இரட்டை நானோ சிம் ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யூஐ ஆர் பதிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,600 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவோடு 88.7 சதவீதம் டிஸ்ப்ளே டூ உடல் விகிதத்துடன் வருகிறது. ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது 12என்எம் யூனிசோக் டி612 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் வசதி ஆதரவோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு
ரியல்மி சி31 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கலாம், ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது 4எக்ஸ் டிஜிட்டல் ஜூம் கொண்ட 13 எம்பி முதன்மை கேமரா வசதியோடு வருகிறது. மேலும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் துளை லென்ஸ் உடன் கூடிய மோனோக்ரோம் சென்சார் வசதியைக் கொண்டிருக்கிறது. ரியல்மி சி31 ஸ்மார்ட்போனின் முன்புற கேமரா குறித்து பார்க்கையில், இதில் 5 எம்பி செல்பி மற்றும் வீடியோ கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

45 நாட்கள் பேட்டரி ஆயுள்
ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மெமரி விரிவாக்க வசதிக்கு என மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இதன் மூலமாக 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். ரியல்மி சி31 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இதில் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5 மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவோடு வருகிறது. ரியல்மி சி31 ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது காத்திருப்பு நேரத்தில் 45 நாட்கள் பேட்டரி ஆயுள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications