ரூ.7,499 விலையில் அறிமுகமான Realme C30s போன்: என்னென்ன அம்சங்கள்?
ரியல்மி நிறுவனம் குறைந்த விலையில் அசத்தலான Realme C30s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அருமையான பேட்டரி, பெரிய டிஸ்பிளே மற்றும் பல அட்டகாசமான அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது.

விலை மற்றும் விற்பனை
2ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,499-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்டின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. வரும் செப்டம்பர் 22-ம் தேதி ரியல்மி இந்தியா மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

அட்டகாசமான டிஸ்பிளே
ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 720x1,600 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சூப்பரான சிப்செட்
ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863A சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் Realm UI Go Edition சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்தபுதிய ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்.

சிங்கிள் ரியர் கேமரா
ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் சிங்கிள் ரியர் கேமரா மட்டுமே உள்ளது. அதாவது இந்த போன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு, ஃபுல் எச்டி வீடியோ பதிவு ஆதரவு உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்தஅசத்தலான ஸமார்ட்போன் மாடல்.

மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்ட்ஸ்லாட் ஆதரவு உள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி
புதிய ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு இந்த போனில் பாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை. அதேபோல் கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவந்துள்ளது
இந்த ரியல்மி சி30எஸ் போன்.

கனெக்டிவிட்டி
வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் வி4.2, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி போன்.
மேலும் இந்த போனின் எடை 186 கிராம் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஸ்ட்ரைப் பிளாக் மற்றும் ஸ்ட்ரைப் ப்ளூ நிறங்களில் ரியல்மி சி30எஸ் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications