Just In
- 8 min ago
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- 13 hrs ago
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- 14 hrs ago
வெறும் ரூ.8,000-க்கு அறிமுகமான 15000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்! அடஇது எப்போ?
- 14 hrs ago
5 கேமரா..iPhone 13 போல் டிஸ்பிளே..விலை வெறும் ரூ.7,600 மட்டுமே.. இது என்ன போன் தெரியுமா?
Don't Miss
- Automobiles
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- Movies
தாய்லாந்தில் ஹனிமூன் ஓவர்...நயன்தாரா – விக்னேஷ் சிவனின் அடுத்த பிளான் என்ன?
- News
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்ததால் பரபரப்பு!
- Finance
ஒரே வாரத்தில் ரூ.1000 சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா?
- Lifestyle
வார ராசிபலன் 26.06.2022-02.07.2022 - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- Sports
மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Realme C30 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அறிவிப்பு.. எகிறும் எதிர்பார்ப்பு!
ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி சி30 (Realme C30) எனும் ஸ்மார்ட்போனை வரும் ஜூன் 20-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய சாதனம் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் விற்பனைககு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி30 ஸ்மார்ட்போன்
இந்த புதிய ரியல்மி சி30 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போதுஆன்லைனில் கசிந்த ரியல்மி சி30 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
ரியல்மி சி30 ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவரும். பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்த அருமையாக இருக்கும். பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் அறிமுகமாகும் இந்தரியல்மி சி30 ஸ்மார்ட்போன்.
Motorola-வின் அடுத்த போன் குறித்த அப்டேட்; ஷாக் ஆகிப்போன Samsung! அப்படி என்ன மேட்டர்?

ஆண்ட்ராய்டு கோ இயங்குதளம்
விரைவில் வெளிவரும் இந்த ரியல்மி சி30 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc T612 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சாதனம் கம்மியான விலையில் தான் அறிமுகமாகும்.

13எம்பி ரியர் கேமரா
புதிய ரியல்மி சி30 ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒரே ஒரு கேமரா மட்டுமே உள்ளது. அதாவது இந்த சாதனத்தின் பின்பு 13எம்பி கேமரா மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

அருமையான பேட்டரி வசதி
அதேபோல் இந்த ரியல்மி சி30 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. குறிப்பாக 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டு இந்த சாதனம் வெளிவரும். பின்பு மெமரிகார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது.

மலிவு விலையில் அறிமுகமாகும்
மேலும் வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் போன்ற பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி சி30 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனம் கம்மி விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. நீங்கள் அசத்தலான அம்சங்களுடன் ஒரு ரியல்மி ஸ்மார்ட்போன் தேடுகிறீர்கள் என்றால் இந்தரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி பற்றி தெரிந்துகொள்ளவும். இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி
ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

தரமான சிப்செட் வசதி
ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 920 5ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் Realme UI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, Dolby Atmos உடன் இணைக்கப்பட்ட இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்,5000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

வியக்கவைக்கும் விலை
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆதரவு போன்ற பல ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி. குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,999-ஆக உள்ளது.பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. குறிப்பாக ஹைப்பர் பிளாக் மற்றும் ஹைப்பர் ப்ளூ நிறங்களில்
இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999