பிப்ரவரி 6: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்.!
ரியல்மி நிறுவனம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி தனது ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனம் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் மினி டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக
கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ ஜி70 சிப்செட் வசதி அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்ததை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி சி3 சாதனத்தில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா விவரங்கள் பற்றி தெளிவாக தெரியவில்லை, இருந்தபோதிலும் டூயல் ரியர் கேமரா அமைப்பை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 12எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

இந்த ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் ஆனது நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும பட்ஜெட் விலையில் பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications








