இந்தியா: ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!

|

ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். தற்சமயம் ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் பிழை திருத்தங்கள் மற்றும் பலவற்றோடு கேமரா மேம்பாடுகளையும் தருகிறது.

 கேமராவில் மேம்பாடுகளைக்

புதுப்பிப்பு பதிப்பு எண் RMX2020_11_A.15 உடன் வருகிறது, இது சுமார் 2.87GB அளவு கொண்டது. புதுப்பிப்பு கேமராவில் மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது. புதுப்பிப்பு முன் கேமரா மாதிரிக்காட்சி தெளிவு மற்றும் உருவப்பட பயன்முறையை மேம்படுத்துகிறது என்பதை புதுப்பிப்பு பதிவு வெளிப்படுத்துகிறது.

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதனத் திரை 400nits பிரைட்நஸ் வசதியைக் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10

ஆண்ட்ராய்டு 10

இந்த ஸ்மார்ட்போனில் 12என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி70 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

3ஜிபி/4ஜிபி ரேம்

ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இதுதவிர லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோ மீட்டர் போன்ற பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

12எம்பி பிரைமரி சென்சார்

12எம்பி பிரைமரி சென்சார்

ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 5எம்பி செல்பீ கேகமரா, எச்டிஆர் ஆதரவு, பனோரமிக், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனம் பட்ஜெட் விலைக்கு தகுந்த அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி3 சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றியே கவலை இருக்கவே இருக்காது. பின்பு பப்ஜி போன்ற விளையாட்டுகளுக்கு இந்த சாதனம் கண்டிப்பாக பயன்படும். மேலும் 2.4ஜிகாஹெர்ட்ஸ், வைஃபை, யுஎஸ்பி-ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வோல்ட்இ, புளூடூத் 5, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

விலை ரூ.6,999-ஆக உள்ளது

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme C3 gets a update in India And More Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X