Realme C3: வாங்குனா இந்த போன் தான் வாங்கணும்! ஏன் தெரியுமா?
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடலை, பிப்ரவரி 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. புதுதில்லியில் ரியல்மி நிறுவனம் நடந்தும் பத்திரிகையாளர் நிகழ்ச்சியில் மதியம் 12:30 மணிக்கு இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

ரியல்மே சி 3 ஸ்மார்ட்போன்
ரியல்மே சி 3 ஸ்மார்ட்போன் மாடல் தான், ரியல்மி நிறுவனத்தின் முதல் ரியல்மி UI இயங்குதளத்தில் இயங்கக் கூடிய முதல் ஸ்மார்ட்போன் மாடலாகும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ரியல்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகிறது.

ரியல்மி UI
ரியல்மே சி 3 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் கூடிய ரியல்மி UI இயங்கு முறையுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. ரியல்மி UI என்பது கலர்ஓஎஸ் 7 இன் தனிப்பயனாக்கப்பட்ட பதிப்பாகும், இது ரியல்மி சாதனங்களுக்கான பிரத்தியேக இயங்குதளமாகும். முதல் கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரத்தியேக அம்சங்களுடன் அறிமுகமாகும் ரியல்மி சி3
பிளிப்கார்ட்-ன் டீஸர் வியாபாரம் ஏற்கனவே வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில பிரத்தியேக அம்சங்களையும் விவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் 6.52' இன்ச் எச்டி பிளஸ் மினி-டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் 89.8% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் வரும் என்றும், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் கிடைக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலிவான விலையில் அறிமுகமாகுமா?
ரியல்மி சி3 ஸ்மார்ட்போன், 3 ஜிபி / 32 ஜிபி மற்றும் 4 ஜிபி / 64 ஜிபி ஸ்டோரேஜ் என இரு வகை வேரியண்ட் மாடல்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 70 12 என்எம் பிராசஸர், 12 மெகாபிக்சல் கொண்ட பின்புற கேமராவைக் கொண்டிருக்கும் என்றும், ப்ளூ கலர் விருப்பத்தில் மலிவான விலையில் கிடைக்கும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.

விற்பனை தளங்களின் விபரம்
ரியல்மி விற்பனை சேனல்களைப் பொறுத்தவரை, பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கிடைக்கும். ரியல்மி நிறுவனம் தனது எல்லா போன்களையும் அதன் சொந்த வலைத்தளத்தின் மூலம் விற்பனை செய்கிறது, எனவே ரியல்ம் சி 3 ஸ்மார்ட்போனையும் அங்கே காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் தளத்தில் இது கிடைக்குமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.


Click it and Unblock the Notifications








