Home
Mobile

செப்டம்பர் 16: 50எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் ரியல்மி C25Y ஸ்மார்ட்போன்.!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி C25Y ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ரியல்மி C25Y ஸ்மார்ட்போன் ஆனது அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

செப்டம்பர் 16: 50எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் ரியல்மி C25Y.!

ரியல்மி C25Y ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த அசத்தலான ரியல்மி C25Y ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

வெளிவந்த தகவலின்படி, ரியல்மி C25Y ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் Unisoc T610 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ரியல்மிC25Y ஸ்மார்ட்போன்
வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 16: 50எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் ரியல்மி C25Y.!

ரியல்மி C25Y ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு
ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும். மேலும் இந்த சாதனம் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி சி25 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி சி25 ஸ்மார்ட்போனில் 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ரியல்மி சி25 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி70 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கைரேகை சென்சார் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி சி25 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி சி25 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக
கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரியல்மி சி25 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி இடம்பெறுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. இரட்டை சிம் ஆதரவு, 4 ஜி வோல்டிஇ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி சி25 ஸ்மார்ட்போன் மாடல்.

செப்டம்பர் 16: 50எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் ரியல்மி C25Y.!

அதேபோல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் ரியல்மி C25Y ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,000-விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ரியல்மி C25Y ஸ்மார்ட்போன். விரைவில் ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக 5ஜி சேவை விரைவில் வரும் என்பதால் தொடர்ந்து செல்போன் நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன.

Best Mobiles in India

English summary
Realme C25Y with 48 Mega Pixel Camera Launching in India on September 16: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X