ரூ.10,999-விலையில் விற்பனைக்கு வரும் ரியல்மி C25Y ஸ்மார்ட்போன்.! முன்பதிவு இன்று துவக்கம்.!

|

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி C25Y சாதனம் இன்று (செப்.20) மதியம் 12 மணிக்கு முன்பதிவு செய்ய கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் வரும் செப்.27-ம் தேதி முதல் பிளிப்கார்ட், ரியல்மி.காம் வலைத்தளங்கள் வழியாக விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி C25Y

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரியல்மி C25Y ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி C25Y மாடல் ரூ.11,999-க்கு விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச்

ரியல்மி C25Y ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ, 420 நிட் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி!யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி!

மார்ட்போனில் ஆக்டா-கோர்

ரியல்மி C25Y ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் யுனிசாக் டி 610 எஸ்ஓசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி ஆர் எடிஷன் இன்டர்பேஸ் கொண்டு இயங்குகிறது இந்த அட்டகாசமான புதிய ஸ்மார்ட்போன். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

iQoo Z5 இந்தியாவில் அறிமுகமா? விலை என்னவாக இருக்கும்? என்னவெல்லாம் இந்த போனில் எதிர்பார்க்கலாம்?iQoo Z5 இந்தியாவில் அறிமுகமா? விலை என்னவாக இருக்கும்? என்னவெல்லாம் இந்த போனில் எதிர்பார்க்கலாம்?

ரியல்மி C25Y ஸ்மார்ட்போனில் 4ஜிபி

இந்த புதிய ரியல்மி C25Y ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

குழப்பமே வேணாம்: பட்ஜெட் விலையில் இதெல்லாம் சிறந்த ஸ்மார்ட்போன்- பார்த்து வச்சுக்கோங்க!குழப்பமே வேணாம்: பட்ஜெட் விலையில் இதெல்லாம் சிறந்த ஸ்மார்ட்போன்- பார்த்து வச்சுக்கோங்க!

 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மோனோக்ரோம்

ரியல்மி C25Y ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் + 2எம்பி மேக்ரோ ஷூட்டர் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்புAI பியூட்டி, HDR மோட், பனோரமிக் வியூ, போர்ட்ரேட், டைம்லாப்ஸ், எக்ஸ்பெர்ட், ப்ரீ-லோடட் ஃபில்டர்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ISS அளவை விட பெரிய விண்வெளி நிலையத்தை உருவாக்கும் சீனா.. முதல் கட்டுமான பனி முடிந்து பூமி திரும்பிய வீரர்கள்..ISS அளவை விட பெரிய விண்வெளி நிலையத்தை உருவாக்கும் சீனா.. முதல் கட்டுமான பனி முடிந்து பூமி திரும்பிய வீரர்கள்..

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி C25Y ஸ்மார்ட்போன். மேலும் ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் v5, GPS/

4ஜி LTE, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் v5, GPS/A-GPS, மைக்ரோ- USB மற்றும் 3.5mm ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறுஇணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி C25Y ஸ்மார்ட்போன். பின்பு இந்த சாதனத்தை எடை 200 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் க்ளேசியர் ப்ளூ மற்றும் மெட்டல் க்ரே நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme C25Y smartphone available for Pre booking today: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X