Home
Mobile

இந்தியாவுக்கும் வரும்: குறைந்த விலையில் 4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி சி25 எஸ் ஸ்மார்ட்போன்!

ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போன் ஹீலியோ ஜி85, 6000 எம்ஏஎச் பேட்டரி, 48 எம்பி கேமராவுடன் அறிவிக்கப்பட்டுள்ளன. ரியல்மி சி25 எஸ் ஸ்மார்ட்போனானது 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 6000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

வாட்டர் ப்ளூ மற்றும் வாட்டர் க்ரே வண்ண விருப்பம்

வாட்டர் ப்ளூ மற்றும் வாட்டர் க்ரே வண்ண விருப்பம்

ரியல்மி நிறுவனம் அமைதியாக ரியல்மி சி25 ஸ்மார்ட்போனை மலேசிய சந்தையில் அறிமுகம் செய்கிறது. ரியல்மி சி25 எஸ் வாட்டர் ப்ளூ மற்றும் வாட்டர் க்ரே வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய மதிப்பீடு விலை ரூ.12,300 ஆக இருக்கிறது. ரியல்மி சி25 எஸ் சாதனம் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. மேலும் இதன் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது டிஸ்ப்ளேவில் வாட்டர் டிராப் நாட்ச் உடன் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி

மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி

ரியல்மி சி25 எஸ் மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக மெமரி விரிவாக்க ஆதரவும் இதில் இருக்கிறது. ரியல்மி சி25 எஸ் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. 6000 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ரியல்மி யூஐ 2.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது.

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனில் கேமரா அம்சங்களை பொறுத்தவரை, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சதுரவடிவத்தில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இணைப்பு விருப்பங்கள்

இணைப்பு விருப்பங்கள்

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை இரட்டை சிம் ஆதரவு, 4ஜி வோல்ட்இ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11, ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட பல ஆதரவுகள் இதில் இருக்கிறது. மேலும் மைஸ்மார்ட் பிரைஸ் அறிக்கையின்படி, ரியல்மி சி25 எஸ் ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மாறுபாடு குறித்து பார்க்கையில் இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆகிய இரண்டு வேரியண்ட்களில் வருகிறது.

புதிய ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்

புதிய ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்

சமீபத்தில் ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு1080 x 2400 பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. ஆண்ட்ராய்டு 11 சார்ந்த realme UI 2.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டது.

Best Mobiles in India

English summary
Realme C25S will be Launching Soon in India with 4GB RAM: Sources Said
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X