Home
Mobile

அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாளை மதியம் 12 மணி அளவில் பிள்ப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும் என்று
கூறப்படுகிறது. இப்போது ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான அம்சங்களுடன்  ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 570 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது
இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே
இயக்கத்திற்கு அருமையாக இருக்கும் ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

அசத்தலான அம்சங்களுடன்  ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மாரட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படுகிறது.

ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் வசதி உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த
புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

அசத்தலான அம்சங்களுடன்  ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

இரட்டை சிம் ஆதரவு, 4ஜி வோல்டிஇ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 பி / ஜி / என்இ புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக வாட்டர் கிரே மற்றும் வாட்டர் ப்ளூ நிறங்களில்
வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. பின்பு இதன் 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.10, 999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme C25s Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X