48எம்பி கேமராவுடன் ரியல்மி சி25 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்தோனேசியாவில் ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி25 ஸ்மார்ட்போன மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அசத்தலான சிப்செட், தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சிறந்த கேமரா வசதி எனப் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி சி25 ஸ்மார்போன் ஆனது வாட்டர் ப்ளூ மற்றும் வாட்டர் பிளாக் நிறங்களில் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.
ரியல்மி சி25 ஸ்மார்ட்போனில் 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி சி25 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி70 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு சுநயடஅந ருஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கைரேகை சென்சார் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி சி25 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி சி25 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரியல்மி சி25 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி இடம்பெறுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டை சிம் ஆதரவு, 4 ஜி வோல்டிஇ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி சி25 ஸ்மார்ட்போன் மாடல்.
மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி25 ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.12,550-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த வருடம் ரியல்மி நிறுவனம் பல அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications