அசத்தலான அம்சங்களுடன் புதிய ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் மாடலை வியட்நாமில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது..

ரியல்மி C21Y ஸ்மார்ட்போன்
ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600 பிக்சல்
தீர்மானம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது
இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

UNISOC T610 பிராசஸர்
ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் UNISOC T610 பிராசஸர் வசதி உடன் MaliG52 GPU ஆதரவும் உள்ளது.எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது, ஆனால் விரைவில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த சாதனத்தில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒருஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

13எம்பி பிரைமரி சென்சார்
ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி tertiary mono லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமராஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி
ரியல்மி C21Y ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் ப்ளூ மற்றும் பிளாக் நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், யுஎஸ்பி டைப் சி போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்தரியல்மி C21Y ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.11,300-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








