ரூ.8,999-விலையில் அசத்தலான ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரம்.!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி C21Y ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் பிளிப்கார்ட், ரியல்மி.காம் உள்ளிட்ட சில தளங்களில் இந்த புதிய
ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி C21Y ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி C21Y மாடலின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் Cross Black மற்றும் Cross Blue நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய ரியல்மி C21Y ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc T610 SoC சிப்செட் வசதி உள்ளது. மேலும் Realme UI சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

ரியல்மி C21Y ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி C21Y சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி C21Y ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 4ஜி எல்டிஇ,
வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.0,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி C21Y ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications