இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி சி21 ஸ்மார்ட்போன்.! என்ன விலை? என்னென்ன சலுகைகள்?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி21 ஸ்மார்ட்போன் மாடலை இன்று விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த சாதனத்தை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் மதியம் 12 மணி அளவில் வாங்க முடியும். குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த ரியல்மி சி21 ஸ்மார்ட்போன் மாடல்.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி21 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி21 மாடலின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. மேலும் கருப்பு, நீல நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி சி21 புதிய ஸ்மார்ட்போன். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும். இப்போது ரியல்மி சி21, ரியல்மி சி20, ரியல்மி சி25 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

Realme C21 சிறப்பம்சம்
6.5 இன்ச் 720x1,600 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட்
அண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி யுஐ
3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்
ட்ரிபிள் பின்புற கேமரா அமைப்பு
13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
2 மெகாபிக்சல் மோனோக்ரோம் லென்ஸ்
5 மெகாபிக்சல் செல்பி கேமரா
பின்புற கைரேகை ஸ்கேனர்
10W சார்ஜர் ஆதரவு
5,000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி25 டிஸ்பிளே
ரியல்மி சி25 ஸ்மார்ட்போனில் 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி சி25 சிப்செட் வசதி
ரியல்மி சி25 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி70 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கைரேகை சென்சார் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி சி25 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி25 கேமராக்கள்
ரியல்மி சி25 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். ரியல்மி சி25 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி இடம்பெறுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி சி25 விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி25 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. இதன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. வாட்டர் கிரே மற்றும் வாட்டர் ப்ளூ நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். வரும் ஏப்ரல் 16-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் ரியல்மி சி25 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

ரியல்மி சி20 டிஸ்ப்ளே
ரியல்மி சி20 ஸ்மார்ட்போனானது 6.5 அங்குல எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் வாட்டர் டிராப் உச்சநிலையை கொண்டுள்ளது. மேலும் இதில் பாதுகாப்பு அமைப்புக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி35 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ரியல்மி சி20 பேட்டரி
ரியல்மி சி20 ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் வருகிறது. இது மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொருத்தவரை இதில் 8 எம்பி பின்புற கேமரா எல்இடி பிளாஷ் உடன் வருகிறது. மேலும் 5 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் ஒற்றை மோனோ ஸ்பீக்கர் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 ஆதரவு மூலம் இயக்கப்படுகிறது.

ரியல்மி சி20 விலை
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. மேலும் கூல் ப்ளூ மற்றும் கூல் கிரே நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications