ரியல்மி சி21 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு நற்செய்தி: புதிய அப்டேட்.!
ரியல்மி சி21 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யுஐ 2.0 அப்டேட் பெறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த அப்டேட் உடன் 2021 Android security patch வசதியும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த அப்டேட் ரியல்மி சி21 வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட்.
ரியல்மி சி21 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட புதிய அப்டேட் ஆனது சிறந்த பேட்டரி பாதுகாப்பை உறுதி செய்கிறது. மேலும் அதன் மெதுவான சார்ஜிங் சிக்கலை சரிசெய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிப்செட் செயல்திறனை மேம்படுத்துகிறது இந்த புதிய அப்டேட்.
குறிப்பாக ரியல்மி சி21 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. தற்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட், பெரிய டிஸ்பிளே, 13எம்பி ரியர் கேமரா
உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி சி21 ஸ்மார்ட்போன்.

அதேபோல் இந்த புதிய ரியல்மி சி21 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த சாதனம் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரியல்மி சி21 சிறப்பம்சம்
6.5 இன்ச் 720x1,600 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட்
அண்ட்ராய்டு 11
3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்
ட்ரிபிள் பின்புற கேமரா அமைப்பு
13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
2 மெகாபிக்சல் மோனோக்ரோம் லென்ஸ்
5 மெகாபிக்சல் செல்பி கேமரா
பின்புற கைரேகை ஸ்கேனர்
10W சார்ஜர் ஆதரவு
5,000 எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications