Home
Mobile

ரூ.7600 மட்டுமே: 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ரியல்மி சி20 அறிமுகம்!

ரியல்மி சி20 ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி, ஹீலியோ ஜி35 செயலி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழுவிவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ரியல்மி சி20 ஸ்மார்ட்போன்

ரியல்மி சி20 ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம் தனது நுழைவுநிலை ஸ்மார்ட்போனாக சி சீரிஸ் தொடர் ரியல்மி சி20 ஸ்மார்ட்போனை வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி, 2ஜிபி ரேம் மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட்டுடன் வருகிறது.

இந்திய மதிப்புப்படி ரூ.7,600 ஆக நிர்ணயம்

இந்திய மதிப்புப்படி ரூ.7,600 ஆக நிர்ணயம்

ரியல்மி சி20 ஸ்மார்ட்போனானது உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அது ப்ளூ மற்றும் கருப்பு நிற வண்ணங்களில் கிடைக்கிறது. ரியல்மி சி20 ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.7600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிற சந்தைகளில் கிடைக்கும் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

6.5 அங்குல எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே

6.5 அங்குல எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே

ரியல்மி சி20 ஸ்மார்ட்போனானது 6.5 அங்குல எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் வாட்டர் டிராப் உச்சநிலையை கொண்டுள்ளது. மேலும் இதில் பாதுகாப்பு அமைப்புக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி35 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்சேமிப்பு

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்சேமிப்பு

ரியல்மி சி20 ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் வருகிறது. இது மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொருத்தவரை இதில் 8 எம்பி பின்புற கேமரா எல்இடி பிளாஷ் உடன் வருகிறது. மேலும் 5 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் ஒற்றை மோனோ ஸ்பீக்கர் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 ஆதரவு மூலம் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme C20 Smartphone Launched With 5000 mAh Battery: Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X