6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் ரியல்மி சி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரம்.!
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி சி17 ஸ்மார்ட்போன் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்தியாவிலும் விரைவில் ரியல்மி சி17 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ரியல்மி சி17 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்போம்.

ரியல்மி சி17 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் திர்மானம் மற்றும் 90Hz refresh rate, 600nits பிரைட்நஸ் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது ரியல்மி சி17 ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 460எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 610ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி சி17 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி சி17 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா 10 2எம்பி சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு வசதி உள்ளிட்டபல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி சி17 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட்
சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக பசுமை மற்றும் நீல நிறங்களில் இந்த சாதனம்
கிடைக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

எல்.டி.இ, வைஃபை, புளூடூத் 5.0, ஜி.பி.எஸ் / ஏ-ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ரியல்மி சி17 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.13,800-விலையில்அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications