Realme C15 குவால்காம் எடிஷன் அறிமுகம்.. பண்டிகை கால சலுகை விலை என்ன தெரியுமா?

|

Realme C15 ஸ்மார்ட்போன் ஒரு மாதத்திற்கு முன்பு மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது ரியல்மி நிறுவனம் மீண்டும் இந்த Realme C15 ஸ்மார்ட்போன் மாடலை புதிய பிராசஸர் உடன் புதிய பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி சி 15 குவால்காம் எடிஷன்

ரியல்மி சி 15 குவால்காம் எடிஷன்

புதிய Realme C15 ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் உடன் Realme C15 குவால்காம் எடிஷன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரியல்மி சி 15 குவால்காம் எடிஷன் போனில் பிராசஸர் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது, மற்ற சிறப்பம்சங்கள் அனைத்தும் அப்படியே தான் இருக்கிறது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த புதிய புதிய ரியல்மி சி 15 குவால்காம் எடிஷன் போனின் விலை விபரத்தைப் பார்க்கலாம்.

பண்டிகை கால அறிமுக சலுகை

பண்டிகை கால அறிமுக சலுகை

பண்டிகை கால அறிமுக சலுகையாக, புதிய ரியல்மி சி 15 குவால்காம் எடிஷன் ஸ்மார்ட்போன் அக்டோபர் 29ம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. புதிய ரியல்மி சி 15 குவால்காம் எடிஷனின் 3 ஜிபி + 32 ஜிபி வேரியண்டின் விலை ரூ .9,499 ஆகவும், 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ரூ .10,499 ஆகவும் கிடைக்கும். இது அக்டோபர் 29 ஆம் தேதி மதியம் 12:00 மணி முதல் realme.com, பிளிப்கார்ட் மற்றும் சில்லரை கடைகளில் வாங்கக் கிடைக்கும்.

Google எச்சரிக்கை.. குழந்தைகளை குறிவைக்கும் இந்த 3 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்..Google எச்சரிக்கை.. குழந்தைகளை குறிவைக்கும் இந்த 3 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்..

அசல் விலை

அசல் விலை

பண்டிகை கால சலுகை நிறைவடைந்ததும் இந்த புதிய ரியல்மி சி 15 குவால்காம் எடிஷன் ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி சி 15 குவால்காம் எடிஷன் போனின் 3 ஜிபி / 32 ஜிபி வேரியண்ட் மாடலின் அசல் விலை ரூ .9,999 ஆகவும், இதன் 4 ஜிபி / 64 ஜிபி வேரியண்டின் அசல் விலை ரூ .10,999 ஆகவும் இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Realme C15 குவால்காம் எடிஷன் சிறப்பம்சம்

Realme C15 குவால்காம் எடிஷன் சிறப்பம்சம்

  • 6.5' இன்ச் டிஸ்ப்ளே
  • அண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி UI
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
  • 4 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் + 128 ஜிபி சேமிப்பு
  • மைக்ரோ எஸ்டி கார்டு சேமிப்பு
  • குவாட் ரியர் கேமரா அமைப்பு
  • 13 மெகாபிக்சல் சென்சார்
  • 8 மெகாபிக்சல் சென்சார் மூலம் அல்ட்ரா-வைட்-ஆங்கிள்
  • 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார்
  • சென்சார்
    • 2 மெகாபிக்சல் ரெட்ரோ சென்சார்
    • 8 மெகாபிக்சல் செல்பி கேமரா
    • வைஃபை
    • புளூடூத் வி 5.0
    • 4 ஜி
    • ஜிபிஎஸ், குளோனாஸ்
    • 3.5 மிமீ ஹெட்செட் ஜாக்
    • மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்
    • 18W பாஸ்ட் சார்ஜிங்
    • 6,000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Realme C15 Qualcomm Edition launched in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X