பட்ஜெட் விலையில் Realme C15: 13 எம்பி க்வாட் கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்!

|

ரியல்மி சி15 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே 1600 x 720 பிக்சல்கள் தீர்மானத்தை கொண்டுள்ளது. கைரேகை சென்சார், குவார் ரியர் கேமரா அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்

புதிய மாடல் ஸ்மார்ட்போன்

ரியல்மி சமீபத்திய புதிய மாடல் ஸ்மார்ட்போனான ரியல்மி சி15 ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்தது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி சி11 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட பேட்டரி மற்றும் வேகமான சார்ஜிங் திறன் மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் நிறுவனம் அறிமுகம் செய்தது.

ரியல்மி சி 15 விலை

ரியல்மி சி 15 விலை

ரியல்மி சி 15 மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 64 ஜிபி சேமிப்பு 3 ஜிபி ரேம் தோராயமாக ரூ. 10,300 ஆகவும் 64 ஜிபி சேமிப்பு 4 ஜிபி ரேம் வேரியண்ட் விலை தோராயமாக ரூ .11,300 ஆகவும் மற்றும் 128 ஜிபி சேமிப்புடன் 4 ஜிபி ரேம் விலை தோராயமாக ரூ .12,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மரைன் ப்ளூ மற்றும் சீகல் சில்வர் வண்ணங்களில் வருகிறது.

Realme C15 விவரக்குறிப்புகள்

Realme C15 விவரக்குறிப்புகள்

ரியல்மி சி 15 6.5 இன்ச் எச்டி + எல்சிடி டிஸ்ப்ளே 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 20: 9 விகிதத்துடன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது ரியல்மி சி 11 போலல்லாமல், பின்புறத்தில் கைரேகை சென்சார் இருக்கிறது. மேலும் இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது.

13 மெகாபிக்சல் பிரதான கேமரா

13 மெகாபிக்சல் பிரதான கேமரா

இதன் கேமரா அமைப்பானது 13 மெகாபிக்சல்கள் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல்கள் அல்ட்ரா-வைட், 2 மெகாபிக்சல்கள் மேக்ரோ, 2 மெகாபிக்சல் ஆழ சென்சாருடன் வருகிறது. அதோடு ஸ்மார்ட்போன் முன்புறத்தில் செல்பிக்கென 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ரியல்மி சி 15 ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. அதோடு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 6000 எம்ஏஹெச் பேட்டரியோடு வருகிறது. மேலும் இரட்டை 4 ஜி வோல்ட் இ, வைபை, ப்ளுடூத் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் வசதி உள்ளது.

6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

சமீபத்தில் நிறுவனம் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்போடு அறிமுகம் செய்தது. பின்பு 2400 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

48எம்பி பிரைமரி கேமரா

48எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Realme C15 may launch with Quad camera,6.5 Inch Full Hd Display

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X