ரியல்மி சி15 ஜூலை 28 அறிமுகம்: 6000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்!

|

ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் 18 வாட்ஸ் சார்ஜிங், 6000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட அட்டகாச அம்சங்களோடு ஜூலை 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன்

ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன்

ரியல்மி ஸ்மாரட்போன் முதற்கட்டமாக இந்தோனேஷியாவில் சி-சீரிஸின் கீழ் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரியல்மி சி 15 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூலை 28 ஆம் தேதி அறிமுகம்

ஜூலை 28 ஆம் தேதி அறிமுகம்

ரியல்மி சி-15 ஸ்மார்ட்போனானது ஜூலை 28 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வானது நிறுவனத்தின் வலைதளம் மற்றும் இந்தோனேசிய சமூக வலைதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில முக்கிய விவரங்கள்

சில முக்கிய விவரங்கள்

ரியல்மி நிறுவனம் ரியல்மி சி-15 ஸ்மார்ட்போன் சில முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 6000 எம்ஏஹெச் பேட்டரி அம்சத்தோடு கிடைக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: ஜியோ குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள் நிறுத்தம்- ஆரம்ப விலை இதுதான்!வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: ஜியோ குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள் நிறுத்தம்- ஆரம்ப விலை இதுதான்!

இரண்டு வண்ணங்களில் விற்பனை

இரண்டு வண்ணங்களில் விற்பனை

இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பும் வெளியாகியுள்ளது. ரியல்மி சி 15 சீகல் கிரே மற்றும் மெரைன் ப்ளூ உள்ளிட்ட இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். பின்புற பேனாலனது குவாட் கேமரா அமைப்போடு வருகிறது. முன்பக்கத்தில் மினி டிராப் டிஸ்ப்ளேவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இதுஒருபுறம் இருக்க மறுபுறம் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்வதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சாதனமானது ஜூலை 24 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 மெகாபிக்சல் கேமரா

48 மெகாபிக்சல் கேமரா

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி எஸ்ஓசி மற்றும் 48 மெகாபிக்சல் கேமராவோடு வருகிறது. ரியல்மி 6ஐ 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரை விரிவாக்கக் கூடிய அம்சம் இதில் உள்ளது. அதோடு இதன் விலை இந்தியாவில் ரூ.15,000-க்கு கூழ் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme C15 going to launch on july 28 with 6000 mAh battery, 18W fast charging

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X