மூன்று ரியர் கேமரா: 6000எம்ஏஎச் பேட்டரி: ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ரியல்மி நிறுவனம் மிகவும் எதிர்பார்த்த ரியல்மி சி12 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது, விலையில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளது.

ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றம் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ரியல்மி சி12 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35என்எம் பிராசஸர் வசதியுடன் IMG PowerVR GE8320 GPU ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுஇந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி சி12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் +2எம்பி மேக்ரோ லென்ஸ் என
மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு
தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபிரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் நீலம், சிவப்பு நிறங்களில் இந்த சாதனம வெளிவந்துள்ளது.

ரியல்மி சி12 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10வாட்பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி/ ஜி / என், புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ்/ பீடோ, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.9,588-விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications