மலிவு விலையில் விற்பனைக்கு வந்த Realme C11 ஸ்மார்ட்போன்! விலை என்ன தெரியுமா?

|

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி C11 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்திய மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட் உடன் வெளிவந்துள்ள உலகின் முதல் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். தற்பொழுது இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய ரியல்மி C11 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விபரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

மலிவு விலையில் ரியல்மே C11

மலிவு விலையில் ரியல்மே C11

சமீபத்திய ஸ்மார்ட்போனான ரியல்மே C11 மாடலை இந்தியா சந்தையில் கடந்த மாதம் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்தது. Realme C11 முதல் முறையாக மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மலிவு விலையில் சிறப்பான அம்சங்களுடன் ரியல்மி நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரியல்ம் C11 ஸ்மார்ட்போனின் விலை

ரியல்ம் C11 ஸ்மார்ட்போனின் விலை

ரியல்ம் C11 ஸ்மார்ட்போனின், 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை வெறும் ரூ .7,499 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரியல்ம் சி 11 ஸ்மார்ட்போன் ரிச் கிறீன் மற்றும் ரிச் க்ரெய் என்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் ஆகிய தளங்களில் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதற்கு முன்பு இதன் பிளாஷ் சேல் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம்! நாசா சொன்ன பதில் இதுதான்!அண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம்! நாசா சொன்ன பதில் இதுதான்!

Realme C11 விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்

Realme C11 விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்

 • 6.5' இன்ச் எச்டி பிளஸ் மினி-டிராப் ஃபுள் ஸ்கிரீன் டிஸ்பிளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு
 • IMG PowerVR GE8320 GPU
 • மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட்
 • 2 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்,
 • 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
 • மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் 256 ஜிபி வரை விரிவாக்க ஸ்டோரேஜ்
கேமரா
 • 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
 • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா & எல்இடி ஃபிளாஷ்
 • 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
 • ரியல்மி யுஐ உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
 • ஃபேஸ் அன்லாக்
 • கைரேகை ஸ்கேனர் இல்லை
பேட்டரி
 • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
 • 5000 எம்ஏஎச் பேட்டரி
 • இணைப்பு அம்சங்கள்
 • டூயல் 4 ஜி வோல்டிஇ
 • வைஃபை 802.11 பி / ஜி / என்
 • புளூடூத் 5
 • ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ ஆகியவையும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme C11 To Go On Sale Today At 12 Noon Via Flipkart, Realme.com : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X