பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் Realme C11: இதோ சிறப்பம்சங்கள்!

|

Realme C11 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்து பார்க்கலாம்.

ரியல்மி சி 11 இந்தியில் அறிமுகம்

ரியல்மி சி 11 இந்தியில் அறிமுகம்

ஜூலை 14 ஆம் தேதி ரியல்மி சி 11 இந்தியில் அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் நிகழ்வு லைவ் ஸ்ட்ரீம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஜூலை 14 மதியம் 1 மணிக்கு இந்த வெளியீடு நிகழ்ச்சி நடைபெறும்.

இ-காமர்ஸ் வலைதளமான பிளிப்கார்ட்

இ-காமர்ஸ் வலைதளமான பிளிப்கார்ட்

ரியல்ம் சி 11 குறித்து இ-காமர்ஸ் வலைதளமான பிளிப்கார்ட் முக்கிய விவரக்குறிப்புகளுடன் பட்டியலிட்டுள்ளது. ரியல்மி சி 11 பல தினங்களாக அறிமுகம் செய்யப்படும் என அதன் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல்ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல்

6.5 அங்குல பெரிய டிஸ்ப்ளே

6.5 அங்குல பெரிய டிஸ்ப்ளே

ரியல்மே சி 11 6.5 அங்குல பெரிய டிஸ்ப்ளேவை 88.7 சதவிகிதம் உடல் திரை விகிதம் மற்றும் மினி டிராப் நாட்ச் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று பிளிப்கார்ட் பட்டியல் வெளிப்படுத்துகிறது. இது 5,000 எம்ஏஎச் பேட்டரி அம்சங்களோடு 40 நாட்கள் காத்திருப்பு நேரம், 12.1 மணிநேர கேமிங், 21.6 மணிநேர திரைப்படம் மற்றும் 31.9 மணிநேர அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. கடந்த மாதம், ரியல்மே இதே ஸ்மார்ட்போனை மலேசியாவிலும் அறிமுகப்படுத்தியது.

1600 x 720 பிக்சல் திர்மானம்

1600 x 720 பிக்சல் திர்மானம்

ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி

ரியல்மி சி11 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

13எம்பி பிரைமரி கேமரா

13எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள்பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்

மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்

இந்த ரியல்மி சி11 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் உடன் IMG PowerVR GE8320 GPU வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி11 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! அம்பானிக்கு தண்ணிகாட்டும் இளைஞர்களின் நிறுவனம்!1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! அம்பானிக்கு தண்ணிகாட்டும் இளைஞர்களின் நிறுவனம்!

ரூ.7,560-ஆக இருக்கலாம்

ரூ.7,560-ஆக இருக்கலாம்

4 ஜி வோல்ட்இ, புளூடூத் 5, வைஃபை, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், டூயல் சிம் மற்றும் ஜி.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.7,560-ஆக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme C11 listed in flipkart with key specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X