ரூ.7,499 மட்டுமே: 5000 எம்ஏஎச் பேட்டரியோடு Realme C11 விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு!

|

ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. இதன் விலை மற்றும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன்

ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன்

ரியல்மி சி 11 ஸ்மார்ட்போனின் ஃபிளாஷ் விற்பனை இன்று மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் மூலம் விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாதனம் பலமுறை ஃபிளாஷ் விற்பனை அறிவிக்கப்பட்டது, ஓபன் சேல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ரியல்ம் சி 11 ஸ்மார்ட்போனானது 5,000 எம்ஏஎச் பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு, மீடியாடெக் ஹீலியோ ஜி 35 எஸ்ஓஎஸ் மற்றும் 32 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு வசதியை கொண்டுள்ளது.

ரியல்மி சி 11: விலை மற்றும் சலுகைகள்

ரியல்மி சி 11: விலை மற்றும் சலுகைகள்

ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காமில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு கொண்ட ஒரே வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ .7,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரியல்ம் சி 11 இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனை ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கும்போது ஐந்து சதவீதம் வரம்பற்ற கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ விருப்பங்கள் கிடைக்கும்.

 ரியல்மி சி 11: அம்சங்கள்

ரியல்மி சி 11: அம்சங்கள்

ரியல்மி சி 11 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 1600 x 720 பிக்சல் எச்டி+ ரெசல்யூஷன் வசதியோடு வருகிறது. மீடியா டெக் ஹீலியோ ஜி 35 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 256 ஜிபி வரை மெமரி விரிவாக்க ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது.

வெறும் ரூ.1 செலுத்தினால் போதும்: அட்டகாச சலுகையோடு பிளிப்கார்ட் பிக் சேவிங் தினம் அறிவிப்பு!

ரியல்ம் சி 11 இரட்டை பின்புறகேமரா

ரியல்ம் சி 11 இரட்டை பின்புறகேமரா

ரியல்மி சி 11 இரட்டை பின்புறகேமரா அமைப்பு உள்ளது. பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா வசதியும், 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா வசதியும் இதில் உள்ளது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி உள்ளது.

5,000 எம்ஏஎச் பேட்டரி

5,000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மி யுஐ இல் இயங்குகிறது. ரியல்மி சி 11, 5,000 எம்ஏஎச் பெரிய பேட்டரியுடன் வருகிறது. இதுவரை வெளியிடப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்களில் அதிக பேட்டரி வசதியை வழங்கும் சாதனம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பு

வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பு

ரியல்மி சி 11 ஸ்மார்ட்போனானது குறைந்த விலையில் நீட்டித்த பேட்டரி அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme C11 India to Go on Sale Via Flipkart and Realme.com Today: Here the Price, Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X