Home
Mobile

என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா: மீண்டும் ரியல்மி ஸ்மார்ட்போனின் விலை உயர்வு- எந்தெந்த மாடல்கள் தெரியுமா?

இந்தியாவில் ரியல்மி 8, ரியல்மி 8 5ஜி, ரியல்மி சி11 (2021), ரியல்மி சி21, ரியல்மி சி25எஸ் உள்ளிட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரியல்மி சி21 (2021) ஸ்மார்ட்போனின் விலை ரூ.300 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ரியல்மி சி21 மற்றும் ரியல் சி25எஸ் சாதனத்தின் விலை ரூ.500 விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.1500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது ரியல்மி.காம் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் பிரதிபலிக்கிறகு.

ரியல்மி 8 விலை

ரியல்மி 8 விலை

ரியல்மி 8 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.14,499 ஆக இருந்த நிலையில் தற்போது இதன் விலை ரூ.15,999 ஆக இருக்கிறது. அதேபோல் ரியல்மி 8 சாதனத்தின் விலை ரூ.15,499 ஆக இருந்த நிலையில் தற்போது இதன் விலை ரூ.16,999 ஆக இருக்கிறது. மேலும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை ஆனது ரூ.16,499 ஆக இருந்த நிலையில் தற்போது இது ரூ.17,999 ஆக இருக்கிறது.

ரியல்மி 8 5ஜி விலை

ரியல்மி 8 5ஜி விலை

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.13,999 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ,15,499 ஆக இருக்கிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.14,999 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.16,999 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.16,999 ஆக இருந்த நிலையில் இதன் விலை ரூ.18,499 ஆக இருக்கிறது. ரூ.1500 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ரியல்மி சி11 (2021) விலை

ரியல்மி சி11 (2021) விலை

ரியல்மி சி11 (2021) ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வேரியண்ட் விலை ரூ.6,999 ஆக இருந்த நிலையில் தற்போது இதன் விலை ரூ.7,299 ஆக இருக்கிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.8,499 ஆக இருந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.8,799 ஆக இருக்கிறது. ரூ.300 வரை இந்த சாதனங்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ரியல்மி சி21, ரியல்மி சி25எஸ் விலை

ரியல்மி சி21, ரியல்மி சி25எஸ் விலை

ரியல்மி சி11 (2021) போன்றே ரியல்மி சி21 மற்றும் ரியல்மி சி25எஸ் சாதனமும் ரூ.500 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரியல்மி சி21 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.8,499 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.8,999 ஆக இருக்கிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு

அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.9,499 ஆக இருந்த நிலையில் இதன் விலை ரூ.9,999 ஆக இருக்கிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.10,499 ஆக இருந்த நிலையில் ரூ.10,999 ஆக இருக்கிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.11,499 ஆக இருந்த நிலையில் ரூ.11,999 ஆக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme C11 2021, Realme C21, Realme 8, Realme C25s Smartphone Models Gets Price Hike in India: Specs, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X