Home
Mobile

ரூ.15000 பட்ஜெட்டில் 8000mAh பேட்டரி.. பழைய ஃபார்முக்கு வந்த Realme.. இந்த மாதத்தில் இது 3வது புது போன்!

ரியல்மி (Realme) நிறுவனம் "மீண்டும் பழைய ஃபார்மிற்கு வந்துவிட்டது போல் தெரிகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே இந்த மாதம் 2 புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து விட்ட நிலையில், தற்போது மூன்றாவதாக இன்னொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தாயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

நினைவூட்டும் வண்ணம் - கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று ரியல்மி 16 5ஜி (Realme 16) ஸ்மார்ட்போனும், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி (Realme NARZO 100 Lite 5G) ஸ்மார்ட்போனும் இந்தியாவில், ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்டன.

ரூ.15000 பட்ஜெட்டில் 8000mAh பேட்டரி.. பழைய ஃபார்முக்கு வந்த Realme!

இப்போது ரியல்மி சி100எக்ஸ் (Realme C100X) ஸ்மார்ட்போனும், கூடிய விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் வெளியிடப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அந்த சந்தைகளில் இந்தியாவும் இருக்கலாம் என்று டிப்ஸ்டர் பாரஸ் குக்லானி (@passionategeekz) தகவல் அளித்துள்ளார். டெக் பிளாக்கர் ஆன பாரஸ் குக்லானியின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய அறிமுகத்திற்கு பிறகு விரைவில் இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? குறிப்பிட்ட டிப்ஸ்டர் அளித்துள்ள விவரங்களின்படி - இந்த ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரியுடன் வரும் மற்றும் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில், டூயல் கேமரா செட்டப் இடம்பெறலாம், இது பில் ஷேப்டு ரியர் கேமரா யூனிட்டில் வைக்கப்படலாம். பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்கள் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கலாம், அதே நேரத்தில் இடது பக்கம் காலியாக விடப்பட்டிருக்கலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது ஒரு பிளாட் ஆன டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்படலாம், அதில் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் டிசைன் இடம்பெறலாம் - இது செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கான முன்பக்க கேமராபிற்கான இடமாக இருக்கும். பெரும்பாலும் இது 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி யுஐ 7.0 யூஸர் இன்டர்பேஸ் உடனான ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது டீப் ப்ளூ டைட் மற்றும் கோல்டன் கோஸ்ட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் 6GB ரேம் + 128GB மற்றும் 6GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் வருகையை ரியல்மி நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை இருக்கும் என்றும் மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார். இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானதும் உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ரியல்மி 16 5ஜி விலை: இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட பேஸிக் வேரியண்ட்டின் விலை ரூ.31,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனிலும் வாங்க கிடைக்கிறது, அதன் விலை ரூ.33,999 ஆகும். கடைசியாக டாப்-ஆஃப்-தி-லைன் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் உள்ளது. அதன் விலை ரூ.36,999 ஆகும். இது பிளிப்கார்ட் வழியாக ஏர் பிளாக் மற்றும் ஏர் ஒயிட் கலர்களில் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme C100X with 8000mAh Battery Under Rs 15000 Budget Launching soon in India Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X