புது Realme போன்.. ரூ.15000 பட்ஜெட்டில் 8000mAh பேட்டரி, 12GB ரேம், 50MP கேமரா, IP64.. எந்த மாடல்?
இந்தியாவில், நாளை, அதாவது ஜூலை 16 ஆம் தேதி அன்று ரியல்மி (Realme) நிறுவனம் ஆனது ஒரு புதிய சி சீரிஸ் (C Series ) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அது ரியல்மி சி100எக்ஸ் (Realme C100x) மாடல் ஆகும்.
இது இந்திய சந்தைக்கு ஒரு புதிய போனாக இருந்தாலும், கடந்த சில வாரங்களாகவே சில சர்வதேச சந்தைகளில் இந்த போன் விற்பனையில் உள்ளது. எனவே, இதன் சிறப்பம்சங்கள் ஏற்கனவே தெரிந்தவைதான். இதன் இந்திய விலை என்ன என்பது மட்டுமே தெரியாமல் இருந்தது. தற்போது அதுகுறித்த விவரங்களும் தெரியவந்துள்ளது.

ஆன்லைனில் ரியல்மி சி100எக்ஸ்-ன் பாஸ் ப்ரைஸ் (box price) குறித்த படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த படத்தின்படி, ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போனின் பாக்ஸ் ப்ரைஸ் ஆனது ரூ.29,999 ஆகும். பெரும்பாலும் பாக்ஸ் ப்ரைஸ்-ஐ விட விற்பனை விலை குறைவாகவே இருக்கும் என்பதால் இது உண்மையான விற்பனை விலையாக இருக்க வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இது ரூ,.15,000 - ரூ.18,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்: பிளிப்கார்ட் (Flipkart) வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசர்களின்படி, ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போனில் 8000mAh பேட்டரி, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 12GB டைனமிக் ரேம் (physical மற்றும் virtual ரேம் உட்பட), 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் மற்றும் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா ஆகிய அம்சங்கள் இடம்பெறுவதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் நீடித்து உழைக்கும் தன்மையை உறுதிசெய்ய, இது IP64 ரேட்டிங் மற்றும் ராணுவ தரத்திலான ஷாக் ரெசிஸ்டென்ஸையும் (shock resistance) கொண்டுள்ளது. இது 'கோல்டன் கோஸ்ட்' (Golden Coast) மற்றும் 'டீப் ப்ளூ டைட்ஸ்' (Deep Blue Tides) ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
ஏற்கனவே குறிப்பிட்டபடி, ரியல்மி நிறுவனம் கடந்த மே மாதத்திலேயே தாய்லாந்தில் ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி விட்டது. இது 6.8-இன்ச் HD+ LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது மற்றும் Unisoc T7250 சிப்செட் மூலம் இயங்குகிறது, அதாவது இது 5ஜி இணைப்பை ஆதரிக்காது.
இந்த ஸ்மார்ட்போனில் LPDDR4x ரேம், eMMC 5.1 ஸ்டோரேஜ் மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகியவைகளும் உள்ளன. இதர சிறப்பம்சங்களில் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் கேனர் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவைகள் அடங்கும்.
ஒருபக்கம் புது போன்.. மறுபக்கம் விலை உயர்வு: கடந்த வாரம் தான் இந்தியாவில் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் (Realme 16 Pro Plus) மற்றும் ரியல்மி 16 (Realme 16) ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. இப்போது அந்த வரிசையில் மேலும் சில ரியல்மி போன்கள் இணைந்துள்ளன. சுவாரஸ்யமாக விலை உயர்த்தப்படாமல் இருந்த ரியல்மி 16 ப்ரோ (Realme 16 Pro) மாடலின் விலை இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 16 மாடலின் விலை மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ரியல்மி 16 ப்ரோ விலை உயர்வு:
8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் - ரூ.37,999 இல் இருந்து ரூ.40,999 ஆக உயர்வு
8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் - ரூ.40,999 இல் இருந்து ரூ.43,999 ஆக உயர்வு
12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் - ரூ.43,999 இல் இருந்து ரூ.46,999 ஆக உயர்வு
ரியல்மி 16 விலை உயர்வு:
8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் - ரூ.34,999 இல் இருந்து ரூ.35,999 ஆக உயர்வு
8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் - ரூ.37,999 இல் இருந்து ரூ.38,999 ஆக உயர்வு
12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் - ரூ.40,999 இல் இருந்து ரூ.41,999 ஆக உயர்வு
ரியல்மி சி83 5ஜி விலை உயர்வு: கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போன் ஆன இது, அறிமுகத்தின்போது ரூ.13,499 க்கு வாங்க கிடைத்தது. பின்னர் அது ரூ.16,499 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, இதன் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,499 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications