போனா வராது.. 8000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதேபோல் ரியல்மி நிறுவனத்தின் 8000எம்ஏஎச் பேட்டரி கொண்ட போன் ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.900 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி சி100எக்ஸ் அம்சங்கள் (realme C100x specifications): தரமான ஆக்டா கோர் யுனிசாக் டி7250 (Octa-Core UNISOC T7250) சிப்செட் உடன் இந்த ரியல்மி சி100எக்ஸ் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது.
அதேபோல் 6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720×1570 பிக்ச்லஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி உடன் இந்த ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில உள்ளது.
அதுவும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது
ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி ரியர் கேமரா உடன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்ட்டட் ஸ்பீக்கர் (ultra linear bottom-ported speaker) போன்ற அனைத்து வசதிகளும் இந்த போனில் உள்ளன.
MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் உடன் இந்த போன் வெளியாகி உள்ளது. டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ரியல்மி சி100எக்ஸ் போனில் உள்ளன.
8000எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.


Click it and Unblock the Notifications
