மார்க்கெட்டே மிரள போகுது.. 8000mAh பேட்டரி.. 50MP கேமரா.. வருகிறது புதிய ரியல்மி போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் அடுத்து ரியல்மி சி100எக்ஸ் எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி சி100எக்ஸ் அம்சங்கள் ( Realme C100x Specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிடி டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் உடன் இந்த புதிய ரியல்மி போன் அறிமுகமாகும்.
50எம்பி ரியர் கேமரா உடன் ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதுவும் இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கப்ரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியுடன் இந்த புதிய ரியல்மி போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8000எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனின பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
கோல்டன் கோஸ்ட் மற்றும் டீப் ப்ளூ டைட் நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும். ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), எப்எம் ரேடியோ (FM Radio) உள்ளிட்ட பல வசதிகள் ரியல்மி சி100எக்ஸ் போனில் உள்ளன.
வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credits: gsmarena, realme


Click it and Unblock the Notifications