Home
Mobile

ரியல்மி சி100எக்ஸ் போன் இந்தியாவில் அறிமுகம்.. 8000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. என்ன விலை?

ரியல்மி சி100எக்ஸ் (realme C100x) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம். 8000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த ரியல்மி போனின் விலை, விற்பனை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ரியல்மி சி100எக்ஸ் அம்சங்கள் (realme C100x specifications): 6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720×1570 பிக்ச்லஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ரியல்மி சி100எக்ஸ் போன் இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை?

ஆக்டா கோர் யுனிசாக் டி7250 (Octa-Core UNISOC T7250) சிப்செட் உடன் இந்த ரியல்மி சி100எக்ஸ் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது.

அதேபோல் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி உடன் இந்த ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில உள்ளது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது

50எம்பி ரியர் கேமரா உடன் ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு புதிய ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்ட்டட் ஸ்பீக்கர் (ultra linear bottom-ported speaker) போன்ற அனைத்து வசதிகளும் இந்த போனில் உள்ளன.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் உடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது. டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ரியல்மி சி100எக்ஸ் போனில் உள்ளன.

ரியல்மி சி100எக்ஸ் போன் இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை?

ரியல்மி சி100எக்ஸ் ஸ்மார்ட்போன் 8000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ரியல்மி சி100எக்ஸ் விலை
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி100எக்ஸ் மாடலின் விலை ரூ.14,499-ஆக உள்ளது. தற்போது பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் இந்த போன் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
realme C100x smartphone launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X