Home
Mobile

யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. புது Realme போன்.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்த ரியல்மி சி100ஐ (Realme C100i) ஸ்மார்ட்போனின் ரேம், மெமரி மற்றும் கலர் விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. பெரிய பேட்டரி கொண்ட பட்ஜெட் மாடலாக இருப்பதால், கேமிங் பிரியர்களிடையேயும் வரவேற்பு பெறலாம்.

ரியல்மி நிறுவனத்தின் சி சீரிஸ் மாடல்கள் எப்போதும் பட்ஜெட் விலையிலேயே வெளியாகும். ஆனால், மிட்-ரேஞ்ச் விலையில் கிடைக்கும் மாடல்களுக்கு நிகரான டிசைன் மற்றும் லுக்கை கொடுக்கும். இந்த ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போனும் அப்படியே இருக்கிறது. இந்தியாவில் ஓரிரு வாரங்களில் வெளியாக இருக்கிறது.

யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?

இதை உறுதி செய்யும்படி ரேம், மெமரி மற்றும் கலர் விவரங்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே, பங்களாதேஷ் மார்கெட்டில் வெளியாகிவிட்டது. இப்போது, கசிந்த விவரங்கள் அதில் கிடைத்ததை போலவே இருக்கிறது. ஆகவே, அதே வெர்ஷனையே இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். இதனால், முழு பீச்சர்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

முதலில் கசிந்த பீச்சர்களை பார்க்கலாம். இந்த ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. ஸ்கைலைன் சில்வர் (Skyline Silver) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

பங்களாதேஷ் மார்கெட்டில் இதே ஸ்மார்ட்போன் டாவ்ன் பர்பிள் (Dawn Purple) மற்றும் டஸ்க் கிரே (Dusk Gray) கலர்களில் வெளியாகியது. ஆகவே, கலரில் மட்டும் அப்கிரேட் இருக்கிறது. டிசைன் மற்றும் பீச்சர்களில் எந்த மாற்றமும் இருக்காது. ஏனென்றால், பங்களாதேஷ் மார்கெட்டிலும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வந்துள்ளன.

ரியல்மி சி100ஐ அம்சங்கள் (Realme C100i Specifications): 6.8 இன்ச் (720 x 1570 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 254 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 900 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொண்ட 8 எம்பி மெயின் கேமராவை கொடுத்துள்ளது. 5 எம்பி செல்பீ கேமராவுடன் இந்த ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. போட்டோ மோட் (Photo Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode) உள்ளிட்ட கேமரா பீச்சர்களை பேக் செய்துள்ளது.

1080p வீடியோ ரெக்கார்டிங் கொடுத்து உள்ளது. ஆக்டா கோர் யுனிசோக் டி615 (Octa Core Unisoc T615) சிப்செட் கிடைக்கிறது. ரியல்மி யுஐ (realme UI) பேஸ்டு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இதே பீச்சர்களுடன் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Realme C100i With 4GB RAM To Launch Soon in India Variants Colour Options Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X