வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.15,000 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து களமிறக்கி வரும் ரியல்மி நிறுவனமானது, இப்போது ரியல்மி சி100ஐ (Realme C100i) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6500mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே கிடைக்கிறது. ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி நிறுவனத்தின் சி சீரிஸ் மாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்க சரியான காரணம் ஒன்று இருக்கிறது. ஏனென்றால், ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையில் விலை கொண்ட மாடல்களிலும் ரூ.30,000 பட்ஜெட் மாடல்களில் கிடைக்கும் பிரீமியம் லுக் கொடுக்கப்படும். இதையே ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போனில் பார்க்க முடிகிறது. பீச்சர்கள் எப்படி இருக்கிறது?

ரியல்மி சி100ஐ அம்சங்கள் (Realme C100i Specifications): 6.8 இன்ச் (720 x 1570 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 900 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் மற்றும் பாண்டா எம்என்228 (Panda MN228) கிளாஸ் புரொடெக்சன் கொடுக்கிறது.
ஏஐ அவுட்டோர் மோட் (AI Outdoor Mode), ஐ கம்போர்ட் மோட் (Eye Comfort Mode) உள்ளிட்ட டிஸ்பிளே பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட்டை இந்த ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த விலைக்கு கிடைக்கும்படி மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போனில் 8 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. செல்பீ மற்றும் வாய்ஸ் கால்களுக்காக 5 எம்பி கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஏஐ எடிட்டர் (AI Editor), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் (AI Smart Image Matting) கிடைக்கிறது.

15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரியை இந்த ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாதபடி ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (Reverse Wired Charging) கிடைக்கிறது. ஆகவே, இயர்பட்ஸ், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட செகண்டரி டிவைஸ்களுக்கு எளிதில் சார்ஜ் செய்து கொள்ளலாம். டைப்-சி டு டைப்-சி பயன்படுத்தலாம்.
பேட்டரியுடன் சேர்த்து 8.7 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை கொடுத்துள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட், ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. MIL-STD-810H சர்டிபிகேஷன் கொடுத்துள்ளது.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. ஸ்கைலைன் சில்வர் (Skyline Silver) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இப்போது, ரியல்மி இந்தியா தளத்தில் ஆர்டருக்கு வருகிறது. மற்ற ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விரைவில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications