அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.13,799 போதும்.. 6500mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
பட்ஜெட் பிரியர்கள் போட்டிப்போட்டு கொண்டு ஆர்டர் செய்யும்படியான தள்ளுபடி விலைக்கு ரியல்மி சி100ஐ (Realme C100i) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் சிப்செட் கொண்ட இந்த ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,200 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.13,799 விலைக்கு இந்த ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ள முடியும்.

ரியல்மி சி100ஐ அம்சங்கள் (Realme C100i Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இந்த ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக ரியல்மி சி100ஐ கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.8 இன்ச் (720 x 1570 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 900 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பாண்டா எம்என்228 கிளாஸ் (Panda MN228 Glass) புரொடெக்டன் மட்டுமல்லாமல், ஏஐ அவுட்டோர் மோட் (AI Outdoor Mode) மற்றும் ஐ கம்போர்ட் மோட் (Eye Comfort Mode) கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது. 8 எம்பி மெயின் கேமராவுடன் கிடைக்கிறது. மேலும் ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போனில் 5 எம்பி செல்பீ கேமரா பேக் செய்யப்பட்டு இருக்கிறது.
மெகாபிக்சல் கம்மியாக இருந்தாலும், ஏஐ எடிட்டர் (AI Editor) மற்றும் ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் (AI Smart Image Matting) உள்ளிட்ட பீச்சர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மட்டுமல்லாமல், ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (Reverse Wired Charging) சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பேட்டரியுடன் 8.7 எம்எம் தடிமன் கொண்ட பாடியை கொடுக்கிறது. மொத்தமாக 210 கிராம் எடை கொண்ட மாடலாக இந்த ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. பட்ஜெட்டில் கிடைக்கும்படி சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கரை (Bottom ported Speaker) இநத ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட், ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மாடலாகவும் இந்த ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஸ்கைலைன் சில்வர் (Skyline Silver) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) கலர்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications