Home
Mobile

நாளை களமிறங்கும் புதிய ரியல்மி போன்.. 6500எம்ஏஎச் பேட்டரி.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்? என்ன விலை?

ரியல்மி நிறுவனம் நாளை (ஆகஸ்ட் 27) இந்தியாவில் புதிய ரியல்மி சி100ஐ (Realme C100i) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ரியல்மி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி சி100ஐ அம்சங்கள் (Realme C100i Specifications): ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 900 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 720 x 1570 பிக்சல்ஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (240Hz Touch sampling rate) உள்ளிட்ட பலவேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

நாளை களமிறங்கும் புதிய ரியல்மி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

யுனிசாக் டி7250 சிப்செட் (Unisoc T7250 Chipset) உடன் ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மறறும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் Realme UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையா உள்ளது.

குறிப்பாக ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொண்ட 8 எம்பி ரியர் கேமரா கொண்டுள்ளது ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளன.

அதுவும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ஆதரவுடன் ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளன.

ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) உடன் அறிமுகமாகும். மேலும் இந்த போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் உள்ளது. இதுதவிர MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன் வெளிவரும்.

அதேபோல் 6500எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சாரஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

மேலும் டூயல் சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை 5, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ரியல்மி சி100ஐ ஸ்மார்ட்போன் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்படும் தகவல் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme C100i will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X