Home
Mobile

அறிமுகமானது புதிய Realme 5ஜி போன்.. 7000எம்ஏஎச் பேட்டரி.. IP64 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி சி100 5ஜி (Realme C100 5G) ஸ்மார்ட்போனை தற்போது தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் பல நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி சி100 5ஜி அம்சங்கள் (Realme C100 5G Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720x1,570 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (180Hz Touch sampling rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அறிமுகமானது புதிய Realme 5ஜி போன்.. 7000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்(MediaTek Dimensity 6300 chipset) உடன் இந்த ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

50எம்பி ரியர் கேமரா உடன் ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

பர்ப்பிள், கிரீன் நிறங்களில் இந்த ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும். 5ஜி, 4ஜி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை 5, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், குளோனாஸ், கலிலியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரியல்மி சி100 5ஜி போனில் உள்ளன.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சாரஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இந்த போனின் எடை 224 கிராம் ஆகும்.

தாய்லாந்தில் ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போனின் விலை THB 6,999 (இந்திய மதிப்பில் ரூ.20,000) ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C100 5G with 7000mAh battery launched in Thailand: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X