வெறும் ரூ.6,999 விலையில் நாட்ச் டிஸ்பிளேயுடன் களமிறங்கிய ரியல்மி சி 1.!
நொய்டா, அமிட்டி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட் போன் மாடலை அறிமுகம் செய்தது.
நொய்டா, அமிட்டி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட் போன் மாடலை அறிமுகம் செய்தது.

இத்துடன் அனைவருக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரியல்மி நிறுவனம் தனது இன்னொரு புது மாடல் ஸ்மார்ட் போன் ஆன ரியல்மி சி1 ஸ்மார்ட் போன்னையும் நிகழ்ச்சில் அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி சி1 ஸ்மார்ட் போன்
ரியல்மி சி1 ஸ்மார்ட் போன் பட்ஜெட் விலையில் நாட்ச் டிஸ்பிளேயுடன், 4230 எம்.ஏ.எச் பேட்டரி மற்றும் ஸ்னாப் டிராகன் 450 சிப்செட் வசதியுடன் மிக குறைந்த விலையில் சியோமி இன் சியோமி ரெட்மி 6ஏ மாடல் ஸ்மார்ட் போன்-ற்கு பொடியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி சி1 விலை
ரியல்மி சி1 ஸ்மார்ட் போன் இன் விலை பற்றிய தகவல் கேட்டவுடன் அனைவரும் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்தனர். இந்திய சந்தையில் தீபாவளி விழாவை முன்னிட்டு, பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பிரத்தியேக விற்பனையின் அறிமுக விலையாக ரூ.6,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரியல்மி நிறுவனம் நிகழ்ச்சியின் பொது அறிவித்தது.

ரியல்மி சி1 விற்பனை
ரியல்மி சி1 ஸ்மார்ட்போன் இன் பிரத்தியேக விற்பனை அக்டோபர் 11 ஆம் தேதி பிளிப்கார்ட் இல், தீபாவளி கொண்டாட்டத்தின் சிறப்பு சலுகையுடன் துவங்குமென்ற இந்நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

ரியல்மி சி1 விபரக்குறிப்பு:
- 6.2 இன்ச், ஐபோன் எக்ஸ் போன்ற இன்பினிட்டி நாட்ச் டிஸ்பிளே
- ஆக்டா கோர் ஸ்னாப் டிராகன் 450 எஸ்.ஓ.சி சிப்செட்
- 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256 ஜிபி வரையிலான விரிவாக்க சேமிப்பு வசதி
- கலர் ஓ.எஸ் 5.1 இணக்கத்துடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 13 மெகா பிக்சல் உடன் கூடிய 2 மெகா பிக்சல் கொண்ட டூயல் பின்னாக கேமரா
- 5 மெகா பிக்சல் கேமரா
- ஏ.ஐ பேஸ் அன்லாக்
- 4,230 எம்.ஏ.எச் பேட்டரி
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- டூயல் சிம் கார்டு மற்றும் எஸ்.டி கார்டு சேவை
- வைப்பை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்
விலை : ரூ.6,999


Click it and Unblock the Notifications