அதிகப்படியான சேமிப்புடன் புதிய ரியல்மி சி1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
அனைவருக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி சி1 ஸ்மார்ட்போன் மாடலில் புதிய சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது
அனைவருக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி சி1 ஸ்மார்ட்போன் மாடலில் புதிய சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அண்மையில் வெளியான ரியல்மி சி1 ஸ்மார்ட்போன் இரண்டு குறைந்தளவு சேமிப்புடன் வெளிவந்தது. தற்பொழுது ரியல்மி நிறுவனம் புதிய வேரியண்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி சி1 ஸ்மார்ட்போன்
ரியல்மி சி1 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் நாட்ச் டிஸ்பிளேயுடன், 4230 எம்.ஏ.எச் பேட்டரி மற்றும் ஸ்னாப் டிராகன் 450 சிப்செட் வசதியுடன் மிக குறைந்த விலையில் சியோமி இன் சியோமி ரெட்மி 6ஏ மாடல் ஸ்மார்ட் போன்-ற்கு பொடியாக அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகப்படியான சேமிப்பு
ரியல்மி சி1 ஸ்மார்ட் போன் இன் துவக்க மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்புடன விற்பனைக்கு வந்தது. அதே போல் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் மாடலை அண்மையில் அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

3 ஜிபி ரேம் வேரியண்ட்
ரியல்மி சி1 ஸ்மார்ட் போன் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பிரத்தியேக விற்பனையை வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி துவங்குகிறது. அறிமுக விலையாக 2 ஜிபி ரேம் வேரியண்ட் ஸ்மார்ட்போன் ரூ.7,499 க்கும் 3 ஜிபி ரேம் வேரியண்ட் வெறும் ரூ.8,499 க்கு விற்பனைக்கு வருகிறது.

ரியல்மி சி1 விபரக்குறிப்பு:
- 6.2 இன்ச், ஐபோன் எக்ஸ் போன்ற இன்பினிட்டி நாட்ச் டிஸ்பிளே
- ஆக்டா கோர் ஸ்னாப் டிராகன் 450 எஸ்.ஓ.சி சிப்செட்
- 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256 ஜிபி வரையிலான விரிவாக்க சேமிப்பு வசதி
- கலர் ஓ.எஸ் 5.1 இணக்கத்துடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 13 மெகா பிக்சல் உடன் கூடிய 2 மெகா பிக்சல் கொண்ட டூயல் பின்னாக கேமரா
- 5 மெகா பிக்சல் கேமரா
- ஏ.ஐ பேஸ் அன்லாக்
- 4,230 எம்.ஏ.எச் பேட்டரி
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- டூயல் சிம் கார்டு மற்றும் எஸ்.டி கார்டு சேவை
- வைப்பை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்


Click it and Unblock the Notifications