Home
Mobile

அள்ளு அள்ளு.. ரூ.6799 க்கு 4ஜி.. ரூ.9499 க்கு 5ஜி.. அடிமட்ட விலைக்கு இறங்கிய 4 லேட்டஸ்ட் Realme போன்கள்!

ரியல்மி (Realme) நிறுவனமானது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக ரியல்மி பிளாக் ஃபிரைடே டீல்ஸ் (Realme Black Friday Deals) என்கிற சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்து உள்ளது. இது 2025 நவம்பர் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி விற்பனையின் போது, ரியல்மி நார்சோ 80 சீரீஸின் (Realme Narzo 80 Series) கீழ் அறிமுகமான நான்கு ஸ்மார்ட்போன்கள் கூப்பன் டிஸ்கவுண்ட்களை பெற்று ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. அதாவது ஏற்கனவே பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் வரும் ரியல்மி நார்சோ 80 சீரீஸ் மாடல்கள் இன்னும் மலிவான விலைக்கு இறங்கியுள்ளன. என்னென்ன மாடல்கள் என்ன ஆபர் விலைக்கு வாங்க கிடைக்கும்?

அள்ளு அள்ளு.. அடிமட்ட விலைக்கு இறங்கிய 4 லேட்டஸ்ட் Realme போன்கள்!

1. ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி (Realme Narzo 80 Lite 4G) - ரூ.6,799
2. ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme Narzo 80 Lite 5G) - ரூ.9,499
3. ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme Narzo 80x 5G) - ரூ.11,999
4. ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி (Realme Narzo 80 Pro 5G) - ரூ.20,499

ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6.0 ஓஎஸ் (Realme UI 6.0 OS) உடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.74-இன்ச் எச்டி பிளஸ் (720 x 1,600 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 563 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டு உள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 1.8ஜிகாஹெர்ட்ஸ் பீக் கிளாக் ஸ்பீடு உடனான ஆக்டா-கோர் யுனிசாக் டி7250 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது மாலி ஜி57 எம்பி1 ஜிபியு, 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனின் ரேம்-ஐ கிட்டத்தட்ட 16 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. இது OV13B10 சென்சார் மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 13 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை சென்சாரை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 15W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,300mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் உள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20.7 மணிநேரம் யூட்யூப் பிளேபேக்கையும் 19 மணிநேரம் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டையும் வழங்கும்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை 4ஜி, ஐபி54 ரேட்டிங், இராணுவ-தர ஷாக் ரெசிஸ்டென்ட்டிற்கான ஆர்மர்ஷெல் ப்ரொடெக்ஷன் ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் ரியல்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனில் ஏஐ பூஸ்ட், ஏஐ கால் நாய்ஸ் ரிடெக்ஷன் 2.0 மற்றும் ஸ்மார்ட் டச் உள்ளிட்ட பல ஏஐ ஆதரவு அம்சங்களையும் சேர்த்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Black Friday Deals Narzo 80 Lite Narzo 80 Pro Narzo 80x Gets Discount Until November 28
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X