ஷாருக்கான் கையில்.. இன்னும் வெளிவராத Realme போன்.. இதற்கு என்ன அர்த்தம்? வேற என்னது.. அதே தான்!
பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கானின் (Shah Rukh Khan) கையில், இந்தியாவில் இன்னும் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்படாத ரியல்மி 11 ப்ரோ பிளஸ் (Realme 11 Pro Plus) ஸ்மார்ட்போன் எப்படி வந்தது என்கிற கேள்விக்கு பதிலை ரியால்மி நிறுவனமே அதிகாரப்பூர்வமான வெளிப்படுத்தியுள்ளது.
விஷயம் என்னவென்றால்.. சீன மொபைல் தயாரிப்பாளர் ஆன ரியல்மி (Realme), நடிகர் ஷாருக்கானை தனது நிறுவனத்தின் புதிய பிராண்ட் தூதராக (Brand ambassador) நியமித்துள்ளது. இந்தியாவில் ரியல்மி 10 ப்ரோ சீரீஸின் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதால், நடிகர் ஷாருக்கான் தான் கையில் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனுடன் போஸ் கொடுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நினைவூட்டும் வண்ணம், ஷாருக்கான் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனானது ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டது.
ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ரியல்மி 11 ப்ரோ ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். ரியல்மி 11 ப்ரோ சீரீஸின் இந்திய அறிமுக தேதி இன்னும் வெளியிடப்படவில்லை, இருப்பினும் இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி 11 ப்ரோ, 11 ப்ரோ பிளஸ் அம்சங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி, இந்த 2 ஸ்மார்ட்போன்களும் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால், இவைகளின் அம்சங்கள் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. இவ்விரு மாடல்களுமே 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு டிஸ்பிளே கொண்டுள்ளன, ஆக்டா-கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகின்றன.
ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களுக்கு இடையேயான வேறுபாடு கேமரா செட்டப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டில் உள்ளது. ப்ரோ மாடலானது ஓஐஎஸ் (OIS) உடனான 100எம்பி மெயின் கேமராவை கொண்டுள்ளது. உடன் ஒரு 2எம்பி கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமராவை பேக் செய்கிறது.
மறுகையில் உள்ள ப்ரோ பிளஸ் மாடலில் "சூப்பர் ஓஐஎஸ்" உடனான 200எம்பி சாம்சங் எச்பி3 சென்சார் உள்ளது. இது 8எம்பி அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது ப்ரோ மாடலில் டூயல் ரியர் கேமரா உள்ளது; ப்ரோ பிளஸ் மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது.
முன்பக்க கேமராவிலும் வேறுபாடுகள் உள்ளன. ப்ரோ மாடலில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. ஆனால் ப்ரோ பிளஸ் மாடலில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இந்த இரண்டு ரியல்மி போன்களுமே 5,000mAh பேட்டரியையே கொண்டுள்ளன. இருப்பினும் ப்ரோ மாடலில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது; ப்ரோ பிளஸ் மாடலில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
ரியல்மி 11 ப்ரோ, 11 ப்ரோ பிளஸ் விலை விவரங்கள்: சீனாவில் ரியல்மி 11 ப்ரோவின் விலை நிர்ணயம் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.20,000 க்கு தொடங்குகிறது. மறுகையில் உள்ளப்ரோ பிளஸ் மாடலின் விலை சுமார் ரூ.24,000 க்கு தொடங்குகிறது. மேலும் இரண்டுமே பல வகையான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








