Home
Mobile

நீ கலக்கு சித்தப்பு.. ஏற்கனவே விலை கம்மி.. இதுல ஸ்பெஷல் ஆஃபர் வேறயா.. Realme ஒரு முடிவோட தான் இருக்கு போல!

ரியல்மி (Realme) நிறுவனம் தனது லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக நார்சோ சீரிஸின் (Narzo Series) கீழ் ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53) மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்திய கையோடு, குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் சிறப்பு விற்பனை (Special Sale) ஒன்றையும் அறிவித்துள்ளது.

ரியல்மி நார்சோ என்53 சிறப்பு விற்பனை எப்போது நடைபெறும்? ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி. நார்சோ என்53-யின் சிறப்பு விற்பனையானது இன்று (அதாவது மே 22 ஆம் தேதி) மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடக்கும். இதன்கீழ் ரியல்மி நார்சோ என்53 ஸ்மார்ட்போனின் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ஆஃபர் விலையில் (Offer Price) வாங்க கிடைக்கும்.

Realme  Narzo N53: ஏற்கனவே விலை கம்மி.. இதுல ஆஃபர் வேறயா?

அதாவது 4ஜிபி ரேம் வேரியண்ட் மீது ரூ.750 தள்ளுபடியும், 6ஜிபி ரேம் ஆப்ஷன் மீது ரூ.1,000 என்கிற தள்ளுபடியும் அணுக கிடைக்குமென்று ரியல்மி அறிவித்துள்ளது. நார்சோ என்53-யின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இதன் 4ஜிபி + 64ஜிபி மற்றும் 6ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ஆனது முறையே ரூ.8,999 மற்றும் ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும்.

ரியல்மி நார்சோ என்53 அம்சங்கள்: இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) மற்றும் 450 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் (Peak Brightness) உடனான 6.74-இன்ச் அளவிலான எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஆக்டா-கோர் யுனிசாக் சிப்செட்டுடன் (Octa-core Unisoc chipset) பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட, இது 2டிபி வரையிலான ஸ்டோரேஜ் விரிவாக்கத்தை (Storage Extension) ஆதரிக்கிறது. அதற்கு நீங்கள் மைக்ரோ எஸ்டி கார்டை (Micro SD Card) பயன்படுத்த வேண்டும். மேலும் இது ரியல்மியின் சொந்த ரியல்மி யுஐ (Realme UI) உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட இயங்குகிறது.

டூயல் சிம் (Dual SIM) ஆதரவுடன் வரும் நார்சோ என்53 ஆனது ஐபோன்களில் காணப்படும் டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) அம்சத்தை போன்றே இருக்கும் மினி கேப்சூல் (Mini Cpasule) வசதியையும் கொண்டுள்ளது. இது போனின் சார்ஜ் ஸ்டேட்டஸ் லோ பேட்டரி அலெர்ட் மற்றும் டேட்டா உயூஸேஜ் போன்ற தகவல்களை டிஸ்பிளேவின் மேல்பக்கத்தில் உள்ள மினி கேப்சூல்வழியாக வழங்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, நார்சோ என்53 ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50 எம்பி மெயின் கேமராவுடன் இரண்டாம் நிலை பிளாக் அண்ட் ஒயிட் சென்சார் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. சுவாரசியமாக இதன் கேமரா செட்டப்பின் வடிவமைப்பும் (Camera Design) கூட ஐபோனில் இருந்து எடுக்கப்பட்டது போலவே உள்ளது.

கடைசியாக இது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் உடன் வருகிறது. ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனை வெறும் 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், இதன் பேட்டரி 50% வரை சார்ஜ் ஆகிவிடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Announced Narzo N53 Special Sale in India Today 2PM to 4PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X