Home
Mobile

மொத்த இந்தியாவும் இந்த போனுக்கு தான் வெயிட்டிங்! ரூ.10400 க்கு iPhone டிசைன், பெரிய டிஸ்பிளே, முரட்டு பேட்டரி!

சமீபத்தில் வெளியான சில ஸ்மார்ட்போன்கள், ஆப்பிள் ஐபோன்களில் காணப்படும் "முக்கோண வடிவத்தில் உட்பொதிக்கப்பட்ட" ட்ரிபிள் ரியர் கேமரா வடிவமைப்பை 'காப்பி' அடித்து இருந்ததை பார்க்க முடிகிறது. ஆனால் நாம் இங்கே பார்க்க போகும் ஸ்மார்ட்போன் சற்றே வித்தியாசமான மாடல் ஆகும். ஏனென்றால்?

இந்த ஸ்மார்ட்போன், ஆப்பிள் ஐபோன்களில் உள்ளதை போன்ற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை மட்டும் காப்பி அடிக்கவில்லை; ஆப்பிள் நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஐபோன்களில் அறிமுகம் செய்த டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) என்கிற ப்ரீமியம் அம்சத்தையும் சேர்த்தே காப்பி அடித்துள்ளது.

மொத்த இந்தியாவும் இந்த போனுக்கு தான் வெயிட்டிங்!

நாம் இங்கே பேசுவது.. முன்பக்கம், பின்பக்கமென எப்படி பார்த்தாலும் "அப்பட்டமாக" ஒரு ஐபோனை போலவே காட்சி அளிக்கும் ரியல்மி சி51 (Realme C51) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது ஐபோன்களில் காணப்படும் டைனமிக் ஐலேண்ட் அம்சத்தை மினி கேப்சூல் (Mini Capsule) என்கிற பெயரின் கீழ் வழங்குகிறது.

ரியல்மி சி51 ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவுக்கு அருகே காணப்படும் மினி கேப்சூல் ஆனது உங்கள் மொபைலின் பேட்டரி லெவல், டேட்டா யூசேஜ் மற்றும் திடெய்லி ஸ்டெப்ஸ் போன்ற முக்கியமான தகவல்களை காட்சிப்படுத்தும். ஐபோனில் உள்ள டைனமிக் ஐலேண்டும் கூட இதே போன்ற பயன்பாட்டையே வழங்குகிறது.

ரியல்மி சி51 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 720 x 1600 ரெசல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7 இன்ச் எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் யூனிசாக் டி612 சிப்செட் (Octa-core Unisoc T612 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்க கூடிய 64ஜிபி மெமரியை கொண்டுள்ளது.

மேலும் பயன்படுத்தப்படாத ஸ்டரோஜில் இருந்து ரேம்-ஐ கடனாக பெறும் விர்ச்சுவல் ரேம் அம்சமும் ((Virtual RAM) Feature) இதில் உள்ளது. அறியாதோர்களுக்கு விர்ச்சுவல் ரேம் என்பது தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் காணப்படும் ரேம் எக்ஸ்டென்ஷன் டெக்னாலஜி (RAM Extension Technology) ஆகும்.

கேமராக்களை பொறுத்தவரை, இது எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50-மெகாபிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. இரண்டாம் நிலை சென்சார் குறித்த தகவல் இல்லை. முன்பக்கத்தில், இது எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) உடன் வரும் ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் ஆனது 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரண்ட் ஸ்கேனர் மற்றும் டூயல் சிம் சப்போர்ட் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.

தைவான் மற்றும் இந்தோனேசிய அறிமுகத்தை தொடர்ந்து ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் ஆனது கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி இந்தியா நிறுவனமானது அதன் எக்ஸ் (ட்விட்டர்) அக்கவுண்ட் வழியாக இந்த ஸ்மார்ட்போனை டீஸ் செய்ய தொடங்கியுள்ளது.

ஆக எப்படி பார்த்தாலும் இது அடுத்த சில நாட்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, தைவான் மற்றும் இந்தோனேசியாவில் இது சிங்கிள் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜின் கீழ் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.10,400 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சந்தையிலும் கூட நாம் இதே போன்ற விலை நிர்ணயத்தை எதிர்பார்க்கலாம். க்ளோபல் வேரியண்ட்டை போலவே ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் ஆனது கார்பன் பிளாக் (Carbon Black) மற்றும் மின்ட் க்ரீன் (Mint Green) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme All set to launch its iPhone like design New Budget Price Smartphone Realme C51 in India Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X