Home
Mobile

ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 50எம்பி கேமராவுடன் புதிய ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்

மிகவும் எதிர்பார்த்த ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி 9ஐ

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2,400x1,080பிக்சல் தீர்மானம், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ்,
240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு
மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுஇந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன்

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6ஜி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 9ஐ

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா+ 2எம்பி மோனோக்ரோம் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன்.

 ரியல்மி 9ஐ

இந்த ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்,33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன் மாடல்.

 எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0,

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் மாடல். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் விலை VND 6,290,000 (இந்திய மதிப்பில் ரூ.20,500) ஆக உள்ளது.

இந்நிறுவனம் ரியல்மி ஜிடி 2 ப்ரோ

அதேபோல் இந்நிறுவனம் ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். வெளிவந்த தகவலின்படி, இந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது Snapdragon 8 Gen1 சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதன்பின்பு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்

அதேபோல் ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும்பல்வேறு கேமரா அம்சங்களும் இவற்றுள் அடக்கம்.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.8-இன்ச் WQHD+ flat OLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று
கூறப்படுகிறது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்லான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

தகவலின்படி இந்த ரியல்மி

வெளிவந்த தகவலின்படி இந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Realme 9i With Snapdragon 680 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X