ரூ.13,999 மட்டுமா?- 50 எம்பி கேமரா, 6ஜிபி ரேம் வசதியோடு ரியல்மி 9ஐ: ஜனவரி 18 அறிமுகம் உறுதி!

|

ரியல்மி 9 தொடரின் சமீபத்திய ஸ்மார்ட்போனான ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வருகிறது. இந்த சாதனம் ஜனவரி 18 ஆம் தேதி அன்று நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி தெரிவித்துள்ளது. பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களுடன் இந்த சாதனம் சமீபத்தில் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி 9ஐ சாதனத்தின் இந்திய மாறுபாடு இந்த மாடலை போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என வெளியீட்டு தேதியை வெளிப்படுத்திய டீசர் தகவல்கள் கூறுகிறது.

ரியல்மி 9ஐ இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி 9ஐ இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது ஜனவரி 18 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு நடைபெறும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சாதனத்தின் வெளியீடு அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மற்றும் பிற சமூகவலைதளம் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதனம் அறிமுகத்திற்கு முன்பே ரியல்மி 9ஐ சில அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 செயலி மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதே சிப்செட் உலகளாவிய மாறுபாட்டிலும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 9ஐ அம்சங்கள்

ரியல்மி 9ஐ அம்சங்கள்

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் வியட்நாமில் முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டது. அதன் விவரங்களை பார்க்கலாம். ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் முழு எச்டி+ ரெசல்யூஷன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்டை பயன்படுத்தி 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யுஐ 2.0 மூலம் இயங்குகிறது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இருக்கிறது. இது சிறந்த ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டிருக்கிறது. ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் இரட்டை 2 எம்பி சென்சார்கள் என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மிட் ரேஞ்ச் விலைப் பிரிவில் கிடைக்கும் சிறந்த கேமரா அமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் இதுவாகும். ரியல்மி ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கென 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

குளோபல் மாறுபாட்டின் இணைப்பு ஆதரவுகள்

குளோபல் மாறுபாட்டின் இணைப்பு ஆதரவுகள்

ரியல்மி 9ஐ குளோபல் மாறுபாட்டின் இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம் கார்ட் ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5.0 மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.15000 என்ற விலைப்பிரிவு சாதனத்துடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் இந்திய விலை

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் இந்திய விலை

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் வியட்நாமில் இந்திய விலை மதிப்புப்படி ரூ.20,500 ஆக இருந்தது. ஆனால் ரியல்மி 9ஐ சாதனத்தில் இந்திய மாறுபாட்டு விலை ரூ.13,999 மற்றும் ரூ.14,499 ஆக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சாதனத்தின் அறிமுகத்திற்கு பின்பு நாட்டில் பல தளங்களில் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் தகவல்கள் தெளிவாக தெரியவில்லை, அதிகாரப்பூர்வ அறிமுகத்தின் போது இதன் கூடுதல் விவரங்கள் மற்றும் விலை தெரியவரும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme 9i Smartphone Set to Launch on January 18 With 50MP Primary Camera, 6GB RAM and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X