Home
Mobile

ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் விரைவில் வெளிவரும் ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன்.!

ரியல்மி நிறுவனம் விரைவில் புதிய ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி 9ஐ

ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் விரைவில் வெளிவரும் ரியல்மி 9ஐ ஸ்மார்ட

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மற்றும் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனில் 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2400x1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளத இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் விரைவில் வெளிவரும் ரியல்மி 9ஐ ஸ்மார்ட

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி 9ஐ. மேலும் இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி ஜிடி நியோ 2டி

ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் விரைவில் வெளிவரும் ரியல்மி 9ஐ ஸ்மார்ட

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் 6.43-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல்தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்தபுதிய ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன்.

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர அசத்தலான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன். ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 1200 SoC சிப்செட் வசதி உள்ளது.மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன்.

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் விரைவில் வெளிவரும் ரியல்மி 9ஐ ஸ்மார்ட

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். இதுதவிர என்எப்சி, ஜிபிஎஸ், வைஃபை 6, ப்ளூடூத் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Realme 9i smartphone coming soon with Snapdragon chipset : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X